‘கோட்டாபயவை நீங்கள் பாதுகாத்துள்ளீர்கள்’ பிரதமர் ரணிலுக்கு லசந்தவின் மகள் அஹிம்சா கடிதம்!

0 138

(நா.தனுஜா)

எனது தந்­தையின் கொலைக்­காக கோட்­டா­பய ராஜ­பக் ஷ ஒரு­போதும் மன்­னிப்­பு­கோர மாட்டார். அதே­வேளை பாரிய கொலைக்­குற்­ற­வாளி என்று இன்று நீங்கள் குறிப்­பி­டு­கின்ற நபரைப் பாது­காப்­ப­தற்கும், அவ­ருடன் தொடர்பைப் பேணு­வ­தற்கும் கடந்த நான்­கரை வரு­ட­கா­லத்தை செல­விட்­ட­மைக்­காக நீங்கள் மன்­னிப்புக் கோரு­வீர்­களா? என்று கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் அஹிம்சா, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் வின­வி­யி­ருக்­கிறார்.

 

மேலும் எனது தந்­தையின் கொலை­யுடன் தொடர்­பு­டை­யவர் தற்­போது உத்­தி­யோ­க­பூர்வ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், பொறுப்­புக்­கூ­ற­லு­ட­னான ஆட்சி, சட்­டத்தின் கீழ் அனை­வ­ருக்கும் சம­னான பாது­காப்பு மற்றும் நீதி என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்தும் ஆற்­றலும் நேர்­மையும் உள்ள ஒரு­வரே அவ­ருக்கு எதி­ரான வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்க வேண்டும் என்று பிரார்த்­திப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் நிகழ்­வொன்றில் ஆற்­றிய உரையை மேற்­கோள்­காட்டி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நேற்று செவ்­வாய்­கி­ழமை அஹிம்சா விக்­ர­ம­துங்க எழு­தி­யுள்ள விரி­வாக கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அக்­க­டி­தத்தில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

நேற்­றைய தினம் (நேற்று முன்­தினம்) அர­சியல் உரையின் போது கடந்த 2009 ஜன­வரி 8 ஆம் திகதி கொல்­லப்­பட்ட என்­னு­டைய தந்­தையும், உங்­க­ளு­டைய நெருங்­கிய நண்­ப­ரு­மான லசந்த விக்­ர­ம­துங்­கவைப் பற்றிக் குறிப்­பிட்­டி­ருந்­தீர்கள். தான் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வானால் அச்­ச­மற்ற சூழ­லொன்றை உரு­வாக்­குவேன் என்று கோட்­டா­பய ராஜ­பக்க்ஷ கூறி­யி­ருந்தார்.

அதற்குப் பிர­தி­ப­லிப்பைக் காட்டும் வகையில் அவர் எனது தந்­தையின் கொலைக்கும், மேலும் பல பயங்­க­ர­மான குற்­றச்­செ­யல்­க­ளுக்கும் மன்­னிப்புக் கோரு­வாரா என்று உங்­க­ளு­டைய உரையில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தீர்கள்.

ஒன்­றைக்­கூற விரும்­பு­கின்றேன். இல்லை. என்­னு­டைய தந்­தையின் கொலைக்­காக கோட்­டா­பய ராஜ­பக்க்ஷ ஒரு­போதும் மன்­னிப்புக் கேட்­க­மாட்டார்.

இது­கு­றித்து அவர் பெரு­மை­ய­டை­கி­றார்கள் என்­பதை கடந்த 10 வரு­ட­கா­ல­மாக அவர் வழங்­கிய அனைத்துத் தொலைக்­காட்சி நேர்­கா­ணல்­களின் போது மறைத்­த­தில்லை.

மன்­னிப்­புக்­கோரத் தேவை­யில்லை என்­பதே அவ­ரு­டைய எண்ணம். ஆனால் நீங்கள் மன்­னிப்புக் கோரி­னீர்­களா பிர­தமர் அவர்­களே? பாரிய கொலைக்­குற்­ற­வாளி என்று இன்று நீங்கள் குறிப்­பி­டு­கின்ற நபரைப் பாது­காப்­ப­தற்கும், அவ­ருடன் தொடர்­பினைப் பேணு­வ­தற்கும் கடந்த நான்­கரை வரு­ட­கா­லத்தை செல­விட்­ட­மைக்­காக நீங்கள் மன்­னிப்புக் கோரு­வீர்­களா?

என்­னு­டைய தந்தை மர­ணித்­தது முதல் வாக்­கு­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக நீங்கள் அவ­ரு­டைய பெயரைப் பயன்­ப­டுத்­தி­னீர்கள். நீங்கள் பிர­த­ம­ரா­கு­வ­தற்குக் கார­ண­மான 2015 ஜனா­தி­பதி மற்றும் நாடா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்­களில் என்­னு­டைய தந்­தையின் கொலை உங்­க­ளுக்கு சாத­க­மான விட­ய­மாக அமைந்­தி­ருந்­தது. என்­னு­டைய தந்­தையின் கொலைக்கு நியா­யத்தைப் பெற்­றுத்­த­ரு­வ­தாகக் கூறியே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்­கி­ய­துடன், பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்தை ஐக்­கிய தேசியக் கட்­சியின் வச­மாக்கிக் கொண்­டீர்கள்.

எனினும் அதி­கா­ரத்­திற்கு வந்­த­வு­ட­னேயே உங்­க­ளது முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட வேண்­டி­யவை தொடர்­பான அடிப்­ப­டைகள் மாற்­ற­ம­டைந்­தது. என்­னு­டைய தந்­தையின் கொலை தொடர்பில் நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு உங்­க­ளு­டைய ஆத­ரவு அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தற்­காக 2015 பெப்­ர­வ­ரியில் உங்­களை அல­ரி­மா­ளி­கையில் சந்­தித்தேன்.

அப்­போது இன்­னமும் பல்­வேறு முக்­கி­ய­மான விட­யங்கள் இருப்­ப­தா­கவும், நீதி­யா­னது லசந்த விக்­ர­ம­துங்க தொடர்­பா­னது மாத்­தி­ர­மல்ல என்றும் நீங்கள் கூறி­னீர்கள். உங்­க­ளு­டைய அலு­வ­லகப் பிர­தா­னியின் நேரடிக் கட்­டுப்­பாட்டின் கீழ் பொலிஸ் திணைக்­களம் காணப்­பட்ட போது­கூட, அவர்கள் கோட்­டா­ப­யவை சட்­டத்தின் முன் கொண்­டு­வ­ர­வில்லை.

இது தேர்­தல்­காலம் என்­பதால் நீங்கள் கோத்­த­பா­யவை கொலை­காரன் என்று பகி­ரங்­க­மாகத் தாக்கிப் பேசு­கி­றீர்கள். குறைந்­த­பட்சம் நீங்கள் இவ்­வாறு கூறி­னாலும், உங்­க­ளு­டைய அலு­வ­லகப் பிர­தானி சாகல ரத்­நா­ய­கவும் ஏனைய அமைச்­சர்­களும் அவரைச் சென்று சந்­திப்­ப­துடன், அவ­ரு­டைய இல்­லத்தில் பல மணித்­தி­யா­லங்­களைச் செல­வி­டு­கி­றார்கள். உங்­க­ளு­டைய அர­சாங்கம் அவ­ருக்கு சட்­ட­மு­ர­ணான அடை­யாள அட்டை, கட­வுச்­சீட்டை வழங்­கு­கின்­றது.

என்­னு­டைய தந்­தையின் வழக்கு விசா­ரணை தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விற்கு உதவி தேவைப்­படும் போதெல்லாம் உங்­களைக் காண­மு­டி­ய­வில்லை. விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க முடி­யாது என்று இரா­ணு­வமும், புல­னாய்வுப் பிரிவும் கூறி­ய­போது நீங்கள் எங்­கி­ருந்­தீர்கள் பிர­தமர் அவர்­களே? அவ்­வ­ழக்கின் பிர­தான விசா­ரணை அதி­காரி நிஷாந்த சில்­வாவை அதி­லி­ருந்து ஜனா­தி­பதி நீக்­கிய போது அதற்கு எதி­ரா­னெ­தி­ரான நிலைப்­பாட்டை நீங்கள் ஏன் எடுக்­க­வில்லை? நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­காக அர்த்­த­முள்ள நட­வ­டிக்­கைகள் எவற்­றை­யேனும் மேற்­கொண்­டி­ருக்­கி­றீர்­களா?

இல்லை. உங்­க­ளு­டைய குடும்­பமும், உயர்­மட்ட அலு­வ­லர்­களும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுடன் நெருங்­கிய பிணைப்பைப் பேணும் அதே­வேளை, அவரைக் கொலை­காரன் என்று நீங்கள் பகி­ரங்­க­மாகக் குறிப்­பி­டு­கின்­றீர்கள்.

என்­னு­டைய தந்­தையின் கொலை­யுடன் தொடர்­பு­டை­யவர் தற்­போது உத்­தி­யோ­க­பூர்வ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், பொறுப்­புக்­கூ­ற­லு­ட­னான ஆட்சி, சட்­டத்தின் கீழ் அனை­வ­ருக்கும் சம­னான பாது­காப்பு மற்றும் நீதி என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்தும் ஆற்­றலும் நேர்­மையும் உள்ள ஒரு அர­சி­யல்­வாதி அவ­ருக்கு எதி­ரான வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்க வேண்டும் என்று பிரார்த்­திக்­கின்றேன்.

கோத்­த­பா­யவை எதிர்க்கும் வேட்­பாளர் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ராஜபக்க்ஷவுடன் திரைமறைவில் ஒப்பந்தமிடுகின்ற ஒருவராக இருக்கக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன்.

ஆட்சியதிகாரத்தில் இருக்கும் போது நீதியைப் பெற்றுத்தக்க ஒருவராலேயே கோத்தபாய ராஜபக்ஷவிற்குச் சவாலாகக் களமிறங்கி, அவரைத் தோற்கடிக்க வேண்டும். மாறாக பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைத் தேர்தலில் வெற்றியடைவதற்காக மாத்திரம் பயன்படுத்துபவர்களால் அல்ல.

இறுதியாக இந்நாடு உங்களின் கருணையின் கீழோ அல்லது உங்களது புதிய நண்பன் கோட்டபய ராஜபக்க்ஷவின் கருணையின் கீழோ இருக்குமென்றால் உங்களுடைய பழைய நண்பனும், என்னுடைய தந்தையுமான லசந்த விக்ரமதுங்கவுக்கு நீதி கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!