முக்கிய பிரமுகர் சென்ற கார், பாதுகாப்புக்காக தொடர்ந்த கொமாண்டோக்களின் டிபெண்டர், முச்சக்கர வண்டி மோதின!

இரு வாகனங்களின் இலக்கத்தகடுகள் அகற்றப்பட்டதாக மக்கள் தெரிவிப்பு!

0 1,049

(ரெ.கிறிஷ்­ணகாந்)

புத்­தல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மஹ­கொ­ட­யாய பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் மாலை முக்­கிய பிர­மு­கரின் வாகன தொட­ர­ணியும் முச்­சக்­க­ர­வண்டி ஒன்றும் மோதுண்­டதில் இருவர் காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

 

மொன­ரா­க­லை­யி­லி­ருந்து வெல்­ல­வாய திசை­யாக பய­ணித்த இந்த வாகனத் தொட­ர­ணியில் பய­ணித்த இரு வாக­னங்­களும், வெல்­ல­வா­ய­வி­லி­ருந்து மொன­ரா­கலை திசை­யாக பய­ணித்த முச்­சக்­க­ர­வண்டி ஒன்றும் மோதிக்­கொண்­டதில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.

இந்த முச்­சக்­க­ர­வண்டி சொகுசு காருடன் மோதுண்டு அதன்­பின்னர் டிபெண்டர் ஒன்றில் மோதுண்­டதில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வி­பத்தில் முச்­சக்­க­ர­வண்­டியில் பய­ணித்த அதன் சாரதி மற்றும் அதில் பய­ணித்த ஒரு­வ­ரு­மாக, இருவர் காய­ம­டைந்த நிலையில் புத்­தல பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். மெத­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த இரு­வரே இவ்­வாறு சிறு காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை, விபத்­துக்­குள்­ளான முக்­கிய பிர­முகர் வாக­னங்­களின் இலக்­கத்­த­க­டுகள் கழற்றி அகற்­றப்­பட்­டுள்­ள­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­விப்­ப­துடன், அவ்­வா­க­னங்கள் இலக்­கத்­த­க­டுகள் இன்றி காணப்­ப­டு­வதை படங்­களின் ஊடாக அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

விபத்­துக்­குள்­ளான வாக­னங்கள் அனைத்தும் புத்­தல பொலிஸ் நிலை­யத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்ள நிலையில் புத்­தல பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­க­ளை­முன்­னெடு த்துள்­ளனர்.

கமாண்டோ சிலர் பய­ணித்த டிபெண்டர் வாக­னமே இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­ன­தா­கவும், சம்­பவம் தொடர்பில் சந்­தே­க­ந­பர்கள் எவரும் கைது­செய்­யப்­ப­ட­வில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் காரி­யா­லயம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, முக்­கிய பிர­முகர் ஒரு­வரே குறித்த வாகனத் தொட­ர­ணியில் பய­ணித்­துள்­ள­தா­கவும் அவர் பய­ணித்த வாகனம் விபத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்­க­வில்லை எனவும் தகவல் அறிந்த வட்­டா­ரங்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!