பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபாலவை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைப்பு

20–23 ஆம் திகதிகளில் ஒரு தினத்தில் வருகை தருமாறும் தெரிவிப்பு! தெரிவுக்குழுவின் காலத்தை ஒரு மாதகாலம் நீடிக்கவும் தீர்மானம்

0 66

(ஆர்.யசி)

உயிர்த்த தாக்­குதல் குறித்து ஆராய நிய­மிக்­கப்­பட்ட நாடா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் கால எல்­லையை மேலும் ஒரு­மாத காலம் நீடிப்­ப­தற்கு தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் அது குறித்த நாடா­ளு­மன்ற அனு­மதி அடுத்­த­வாரம் பெ­றப்­ப­ட­வுள்­ளது.

மேலும் எதிர்­வரும் 20ஆம் திக­தி­யிலி ருந்து 23 ஆம் திக­திக்குள் ஒரு தினத்தில் தெரி­வுக்­குழு முன்­ஆஜராகுமாறு ஜனா­தி­ப­திக்கு தெரி­வுக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது.  உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து ஆராய்ந்து நாடா­ளு­மன்­றத்­துக்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ள நாடா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­கு­ழுவின் கால எல்­லை­யா­னது இந்த மாதம் 23 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வரு­கி­றது.

இந்­நி­லையில், சாட்­சி­யங்­களின் இறு­திக்­கட்ட விசா­ர­ணை­யாக ஜனா­தி­ப­தி­யிடம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ள­துடன் அறிக்­கையை முழு­மைப்­ப­டுத்த வேண்­டி­யுள்ள நிலையில் விசேட தெரி­வுக்­கு­ழுவின் கால எல்­லையை மேலும் ஒரு­மாத காலம் நீடிக்க, அதா­வது அடுத்த மாதம் 23 ஆம் திகதி வரையில் நீடிக்க தெரி­வுக்­குழு தீர்­மானம் எடுத்­துள்ள நிலையில் அதற்­கான அனு­மதி நாடா­ளு­மன்­றத்தில் கோரப்­ப­ட­வுள்­ளது.

எதிர்­வரும் 20ஆம் திகதி அடுத்த நாடா­ளு­மன்றம் கூட­வுள்ள நிலையில் அந்­த­வார அமர்வு நாட்­களில் தெரி­வுக்­குழு கால எல்­லையை நீடிக்கும் அனு­ம­தியை கேட்­க­ வுள்­ள­தா­கவும்,  இதே­வேளை, நாடாளுமன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினை சாட்­சியம் வழங்க அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் 20 ஆம் திக­தி­யி­லி­ருந்து 23 ஆம் திகதி வரையில் நான்கு நாட்­க­ளுக்குள் ஏதேனும் ஒரு நாளில் சாட்­சி­ய­ம­ளிக்க வருமாறும் குறித்த தினம் என்னவென தெரிவுக்குழுவுக்கு தெரிவுக்குமாறும் கூறியுள்ளதாக தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!