தெவுந்தர கடலில் மூழ்கிய இரு ரஷ்யர்கள் கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டனர்

0 232

தெவுந்­தர தலல்ல கடலில் மூழ்­கிய இரண்டு வெளி­நாட்­ட­வர்கள் கடற்­ப­டை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளனர். இந்தச் சம்­பவம் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது.

ரஷ்­யாவி­லி­ருந்து இலங்­கைக்கு சுற்­றுலாப் பயண மேற்­கொண்ட ரஷ்ய நாட்டுப் பிர­ஜைகள் சிலர் தலல்ல கடலில் நீராடிக் கொண்­டி­ருந்த போது அவர்­களில் இருவர் நீரில் மூழ்­கி­யுள்­ளனர்.

இதன்­போது நிறுத்­தப்­பட்­டி­ருந்த கடற்­ப­டையின் விரைவு படகு விரைந்து சென்று அவர்­களை மீட்டு பாது­காப்­பாக கரைக்கு கொண்டு வந்­தது. மீட்­கப்­பட்­ட­வர்கள் 28 மற்றும் 47 வயதுடையவர்களாவர்.  

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!