வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 14 : 1947- பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது

0 47

1880: ஜேர்­ம­னியின் கொலோன் நகரின் புகழ்­பெற்ற கட்­டடங்­களில் ஒன்­றான கொலோன் தேவா­லய கட்­ட­டத்தின் நிர்­மாணப் பணிகள் பூர்த்­தி­ய­டைந்­தன.

1900: ஐரோப்­பிய, ஜப்­பா­னிய அமெ­ரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்­கி­ர­மித்­தன.

1947: பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது

1908: முத­லா­வது சர்­வதேச அழகு ராணி போட்டி இங்­கி­லாந்தின் போக்ஸ்டன் நகரில் நடை­பெற்­றது.

1912: நிக்­க­ர­கு­வாவில் அமெ­ரிக்க சார்பு அரசை அமைப்­ப­தற்­காக அமெ­ரிக்கக் கடற்­ப­டை­யி­னர்­ நிக்­க­ர­கு­வாவை முற்­று­கை­யிட்­டனர்.

1937: ஆறு ஜப்­பா­னிய விமா­னங்கள் சீனா­வினால் சுட்டு வீழ்த்­தப்­பட்­டன.

1947: பிரித்­தா­னிய இந்­தி­யாவில், ஐக்­கிய இராச்­சி­யத்தின் நிர்­வா­கத்­தி­லி­ருந்த பாகிஸ்தான் சுதந்­திரம் பெற்று, பொது­ந­ல­வாய நாடுகள் அமைப்பில் இணைந்­தது.

1969: வட அயர்­லாந்­துக்கு ஐக்­கிய இராச்­சிய இரா­ணு­வத்­தி­னர்­அ­னுப்­பப்­பட்­டனர்.

1971: பஹ்ரெய்ன் சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

1972: கிழக்கு ஜேர்­ம­னியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலை­யத்­தி­லி­ருந்து கிளம்­பும்­போது விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 156 பேர் ­கொல்­லப்­பட்­டனர்.

2006: இஸ்ரேல், லெபனான் நாடு­க­ளுக்­கி­டையில் போர்­மு­டி­வுக்கு வந்­தது.

2005: கிறீஸின் ஏதென்ஸ் நகரில் இடம்­பெற்ற விமான விபத்தில் 121 பேர்­ உ­யி­ரி­ழந்­தனர்.

2006: முல்­லைத்­தீவு செஞ்­சோலை சிறார்கள் இல்லம் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 61 பேர்­ உ­யி­ரி­ழந்­தனர்.

2007: ஈராக்கில் கட்­டா­னியா என்ற இடத்தில் இடம்­பெற்ற நான்கு தொடர்­குண்­டு­வெ­டிப்­பு­களில் 796 பேர் ­கொல்­லப்­பட்­டனர்.

2010: முத­லா­வது இளை­யோர்­ ஒ­லிம்பிக் போட்­டிகள் சிங்­கப்­பூரில் ஆரம்­ப­மா­கின.

2013: எகிப்தில் முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் முர்­ஷிக்கு ஆத­ர­வாக ஆர்ப்­பாட்டம் செய்த நூற்­றுக்­க­ணக்­கா­னோர் ­கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து அவ­ச­ர­கா­ல­நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

2015: கியூபாவின் தலைநகர் ஹவானாவில் 54 வருடங்களின் பின்னர் மீண்டும் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்பட்டது.

2018: இத்­தா­லியில் பால­மொன்று இடிந்து வீழ்ந்­ததால் 35 பேர் உயி­ரி­ழந்­தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!