நோர்வே பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இளைஞனுக்கு 4 வார காலம் விளக்கமறியல்

0 1,175

நோர்­வேயில் பள்­ளி­வாசல் ஒன்றில் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­துடன், வீடொன்றில் தனது ஒன்­று­விட்ட சகோ­த­ரியை சுட்­டுக்­கொன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட இளை­ஞனை 4 வாரங்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நோர்வே நீதி­மன்­ற­மொன்று நேற்­று­முன்­தினம் உத்­த­ர­விட்­டது.

நோர்வே தலை­நகர் ஒஸ்­லோ­வுக்கு அரு­கி­லுள்ள பள்­ளி­வாசல் ஒன்றில் கடந்த சனிக்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் ஒருவர் காய­ம­டைந்தார்.

பள்­ளி­வா­சலில் இருந்த 65 வய­தான ஒரு­வரால் துப்­பாக்­கி­தாரி மடக்கிப் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். இத்­துப்­பாக்­கி­தாரி 21 வய­தான பிலிப் மன்ஷோஸ் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

இந்த இளை­ஞனை ஒஸ்லோ நீதி­மன்­ற­மொன்றில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அதி­கா­ரிகள் ஆஜர்­ப­டுத்தினர்.

முகம், கழுத்து, கைக ளில் சிராய்ப்புக் காயங்­க­ளுடன் அந்த இளைஞன் காணப்­பட்டான்.

பள்­ளி­வா­சலில் துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­து­வ­தற்கு முன், வீடொன்றில் தனது சகோ­தர முறை­யான 17 வயது யுவ­தி­யையும் பிலிப் மன்ஷோஸ் சுட்­டுக்­கொன்­ற­தாக கூறப்படுகிறது.

பள்ளிவாசல் துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் அந்த யுவதியின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.

துப்பாக்கிதாரியை மடக்கிப் பிடித்த 65 வயதான பாகிஸ்தானியர்

இதே­வேளை, துப்­பாக்­கி­தா­ரி­யான மேற்­படி இளை­ஞனை பள்­ளி­வா­சலில் மடக்கிப் பிடித்­தவர் பாகிஸ்­தா­னிய மொஹம்மத் ரபீக் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.

இவர் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் விமானப் படை­வீரர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொஹம்மத் ரபீக்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!