இலங்கை ரயில்வே சேவையில் இணையும் சீனாவின் நவீன எஸ் – 14 ரயில் பெட்டிகள்!

இரண்டு இயந்திரங்கள், குளிரூட்டப்பட்ட பெட்டிகள், உணவு அறைகளும் உள்ளடக்கம்

0 70

(எம்.மனோ­சித்ரா)

சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அதி நவீன எஸ் – 14 புகை­யி­ரத பெட்­டிகள் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு துறை­மு­கத்­துக்குக் கொண்டு வரப்­பட்­டன. மத்­திய மாகா­ணத்­துக்­கான ரயில்வே சேவைக்­காக கொண்டுவரப்­பட்­டுள்ள இந்த ரயில் பெட்­டி­களின் பெறு­மதி 10.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும்.

இவற்றில் அதி நவீன எஸ் – 14 இயந்­தி­ரங்கள் பொருத்­தப்­பட்ட இரண்டு பெட்­டி­களும் காணப்­ப­டு­கின்­றன.இரண்டாம் வகுப்­புக்கு குளி­ரூட்­டப்­பட்ட இரு ரயில் பெட்­டி­களும், மூன்றாம் வகுப்­புக்கு மூன்று ரயில் பெட்­டி­களும் இதில் காணப்­ப­டு­கின்­றன.

மேலும் உணவு அறையும் இந்த பெட்­டி­களில் உள்­ள­டங்கு ­கின்­றன. எதிர்­வரும் நாட்­களில் இதனை பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய பின்னர் சேவையில் ஈடு­ப­டுத்த எதிர்­பார்த்­துள்­ள­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மத்­திய மாகா­ணத்தில் மலைப்­பாங்­கான பிர­தே­சமே அதி­க­மாகக் காணப்­ப­டு­வதால் அதில் ரயில்களை சேவையில் ஈடு­ப­டுத்­து­வது இல­கு­வா­ன­தல்ல. இதன் கார­ண­மாக மலை­யத்­துக்­கான ரயில் சேவையில் தட்­டுப்­பாடு நில­வி­யது. இந்த தட்­டுப்­பாட்டை நிவர்த்தி செய்­வ­தற்­கா­கவே சீனா­வி­லி­ருந்து இந்த ரயில்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு ரயில்வே திணைக்­க­ளமும் போக்­கு­வ­ரத்து அமைச்சும் தீர்­மா­னித்­தன.

மேலும் எட்டு ரயில்கள் எதிர்­வரும் நாட்­களில் இறக்­கு­மதி செய்­யப்­படும். அவற்றில் குளி­ரூட்­டப்­பட்ட ரயில் பெட்­டிகள் நான்கு உள்­ளிட்ட 7 பெட்­டிகள் காணப்­படும். இவை இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் நகரங்களுக்கிடையிலான ரயில் சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!