பாம்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நபர்

0 1,176

காய­ம­டைந்த பாம்பு ஒன்­றுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­காக, அப்­பாம்பை வைத்­தி­ய­சா­லைக்கு ஒருவர் தூக்கிச் சென்ற சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

  

ஒடிஷா மாநி­லத்த்தின் பாலசோர் நக­ரி­லுள்ள ஃபக்கீர் மோகன் மருத்துவக் கல்­லூரி வைத்­தி­ய­சா­லைக்கு கடந்த சனிக்­கி­ழமை மேற்­படி பாம்பு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

59 வய­தான சமூக சேவை­யா­ளரும், முன்னாள் இரா­ணுவ வீர­ரு­மான மனோஜ் குமார் தாஸ் தனது வீட்டின் பின்­பு­றத்தில் 5 அடி நீள­முள்ள பாம்பு ஒன்று வயிற்றில் காயங்­க­ளுடன் மரங்­க­ளுக்கு இடையே சிக்கி இருப்­பதை கண்டார்.

இவர் 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக பாம்­பு­களை மீட்டு வரு­பவர். காய­ம­டைந்­தி­ருந்த அந்த பாம்பை மீட்டார். பின்பு அதனை சிகிச்­சைக்­காக ஒரு கால்­நடை மருத்­து­வ­ரிடம் கொண்டு செல்ல முடிவு செய்தார். அடுத்த நாள், தாஸ் பாம்பை உள்ளூர் கால்­நடை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்றார். அந்த வைத்­தி­ய­ சாலை மூடப்­பட்­டி­ருந்­தது.

உட­ன­டி­யாக அவர் மாநி­லத்தின் 3 அரசு மருத்­துவக் கல்­லூ­ரி­களில் ஒன்­றான ஃபக்கீர் மோகன் மருத்­துவக் கல்­லூரி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். மருத்­து­வ­ம­னைக்கு சென்ற அவர், மருத்து­வ­ம­னையின் வெளி­நோ­யாளர் பிரிவில், சிகிச்­சைக்­கான பத்­தி­ரத்­தையும் பெற்­றுக்­கொண்டார்.

வெளி­நோ­யாளர் பதிவு செய்யும் கரு­ம ­பீ­டத்தில், நோயா­ளியின் பெயர் சப்பா (சப்பா ஒடியா மொழியில் பாம்பு என அர்த்தம்) என குறிப்­பிட்டார். அதன் வயது 7 என்றும் ஆண் என்றும் கூறினார். ஆனால், சிகிச்­சைக்­கான பத்­தி­ரத்தை எழு­தி­ய­வ­ருக்கு பாம்­புக்­குத்தான் சிகிச்சை என தெரி­ய­வில்லை.

இது குறித்து மனோஜ் குமார் தாஸ் கூறும்­போது, கவுண்­டரில் இருந்­தவர் நோயா­ளியின் பெயரைப் பற்றி என்­னிடம் கேட்­ட­போது, நான் “சப்பா” என்றேன். அதன் வயது மற்றும் பாலினம் குறித்து என்­னிடம் கேட்­கப்­பட்­டது. நான் அவ­ரிடம் 7 வயது ஆண் பாம்பு என்று சொன்னேன்.

பின்னர் சிகிச்­சைக்­காக துணை மருத்­துவ ஊழி­யர்கள் காய­ம­டைந்த நோயாளி சப்­பாவை தனது பையில் இருந்து வெளியே எடுத்­த­போது அங்­கி­ருந்த மருத்­துவ ஊழி­யர்கள் பயத்தில் அலறி அடித்து ஓடினர்.

அவர்கள் பாம்­புக்கு சிகிச்­சை­ய­ளிக்க கட்­டுப்­போட மறுத்­து­விட்­டனர். பாம்­புக்கு சிகிச்­சை­ய ­ளிக்க தாஸ் கேட்­டுக்­கொண்­ட­போது பயந்­து­போன அவர்கள் கால்­நடை மருத்­து­வ­ரிடம் காட்டு­மாறு கூறி­னார்கள்.

இது குறித்து தாஸ் கூறும்­போது, பாம்­பு­களைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த விரும்­பி­ய­தாலும், கால்­நடை மருத்­து­வ­ம­னையை 24 மணி நேரம் திறந்து வைத்­தி­ருக்க வேண்­டியும்தான் வேண்டும் என்றே பாம்பை மருத்­துவக் கல்­லூ­ரி-­வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­ற­தாக கூறினார்.

”மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் உடனடி சிகிச்சை தேவை, கால்நடை மருத்துவமனை நீண்ட நேரம் திறந்திருக்க வேண்டும். தவிர, அனைத்து பாம்புகளும் விஷம் கொண்டவை அல்ல எனவும் மனோஜ் குமார் தாஸ் கூறினார்.

 

via GIPHY

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!