பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டி

0 194

இங்­கி­லாந்தின் பேர்­மிங்­ஹாமில் 2022இல் நடை­பெ­ற­வுள்ள பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மகளிர் இரு­பது 20 கிரிக்கெட் போட்டி இணைக்­கப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையும் இங்­கி­லாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையும் இணைந்து எடுத்­துக்­கொண்ட முயற்­சியின் பல­னாக பொது­ ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மகளிர் இரு­பது 20 கிரிக்கெட் இணைக்­கப்­பட்­டுள்­ளதை பொது­ ந­ல­வாய விளை­யாட்டு சம்­மே­ளனம் செவ்­வாய்க்­கி­ழமை உறுதி செய்­தது.

பேர்­மிங்ஹாம் 2022 பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் நடை­பெ­ற­வுள்ள மகளிர் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் எட்டு நாடுகள் பங்­கு­ பற்­ற­வுள்­ளன. போட்­டிகள் யாவும் எஜ்­பெஸ்டன் விள­யைாட்­ட­ரங்கில் நடை­பெறும்.‘‘இன்­றைய தின­மா­னது மகத்­தான நாளாகும்.

பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மீண்டும் கிரிக்கெட் இணைக்­கப்­ப­டு­வ­தை­யிட்டு நாங்கள் பெரு­மிதம் அடை­கின்றோம்’’ எனப் பொது­ந­ல­வாய விளை­யாட்டு சம்­மே­ளனத் தலைவர் டேம் லூயிஸ் மார்ட்டின் தெரி­வித்தார்.

‘‘கோலா­லம்பூர் 1998 பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் கிரிக்கெட் கடை­சி­யாக விளை­யா­டப்­பட்­டது. அப்­போது ஆட­வ­ருக்­கான 50 ஓவர் கிரிக்கெட் நடத்­தப்­பட்­ட­துடன் தென் ஆபி­ரிக்கா வெற்றி (தங்கப் பதக்கம்) பெற்­றி­ருந்­தது. அவ் வருடம் ஜெக்ஸ் கலிஸ், ரிக்கி பொன்டிங், சச்சின் டெண்­டுல்கர் போன்ற கிரிக்கெட் விற்­பன்­னர்கள் விளை­யா­டினர்’’ என லூயிஸ் மார்ட்டின் மேலும் தெரி­வித்தார். (22 ஆம் பக்கம் பார்க்க)

இதே­வேளை, ‘‘பொது­ந­ல­வாய விள­யைாட்டு விழாவில் மகளிர் கிரிக்கெட் இணைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது மகளிர் கிரிக்­கெட்­டுக்கும் உலகக் கிரிக்கெட் சமூ­கத்­துக்கும் வர­லாற்று முக்­கியம் வாய்ந்த தரு­ண­மாகும். இந்த முயற்சி நிதர்­ச­ண­மா­வ­தற்கு சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையும் இங்­கி­லாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபையும் இணைந்து செயற்­பட்­டமை பாராட்­டுக்­கு­ரி­யது.

மகளிர் கிரிக்கெட் தொடர்ந்து பல­ம­டைந்த வண்ணம் உள்­ளது. பேர்­மிங்ஹாம் 2022 பொது­ந­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மகளிர் கிரி­க­கெட்டை இணைப்­ப­தற்கு பொது­ந­ல­வாய விளை­யாட்டு சம்­மே­ளனம் முன்­வந்­த­தை­யிட்டு நாங்கள் மகிழ்ச்­சியும் பெரு­மி­தமும் அடை­கின்றோம்’’ என சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் புதிய பிர­தம நிறை­வேற்று அதி­காரி மானு சவ்னி தெரி­வித்தார்.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழா அவ் வருடம் ஜூலை 27ஆம் திகதிமுதல் ஆகஸ்ட் 7ஆம் திகதிவரை நடைபெறுவதுடன் அவ் விளையாட்டு விழாவில் 18 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!