இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்றுநர் பதவி குறும்பட்டியலில் அறுவர், நாளை மறுதினம் நேர்முகத் தேர்வு

0 67

இந்­திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­றுநர் பத­விக்கு குறும்­பட்­டி­ய­லி­டப்­பட்ட அறு­வரை இந்­தி­யாவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலை­வரும் 1983 உலக சம்­பியன் அணித் தலை­வ­ரு­மான கபில் தேவ் தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் ஆலோ­சனைக் குழு நேர்­முகத் தேர்­வுக்கு உட்­ப­டுத்­த­வுள்­ளது.

மைக் ஹெசன் (நியூ­ஸி­லாந்து), லால்சாந்த் ராஜ்பட் (இந்­தியா), ரொபின் சிங் (இந்­தியா), ரவி ஷாஸ்­திரி (இந்­தியா), பில் சிமன்ஸ் (மேற்­கிந்­தியத் தீவுகள்), டொம் மூடி (அவுஸ்­தி­ரே­லியா) ஆகி­யோரே தலைமைப் பயிற்­றுநர் பத­விக்கு குறும்­பட்­டி­ய­லி­டப்­பட்ட அறுவர் ஆவர்.

இவர்­க­ளுக்­கான நேர்­முகத் தேர்வு கபில் தேவ் தலை­மையில் நாளை­ம­று­தினம் நடை­பெ­ற­வுள்­ளது.

குறும்­பட்­டி­யலில் இடம்­பெறும் ஆறு பேருக்­கு­மான நேர்­முகத் தேர்வு நடை­பெறும் நேரத்­தையும் திக­தி­யையும் இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை நேற்­று­முன்­தினம் அறி­வித்­தது.

துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு, களத்­த­டுப்பு போன்ற பல்­வேறு துறை­க­ளுக்­கான பயிற்­றுநர் பத­வி­க­ளுக்கு 2,000க்கும் மேற்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பித்­தி­ருந்த போதிலும் தலைமைப் பயிற்­றுநர் பத­விக்கு சில பிர­பல்­ய­மான பயிற்­று­நர்கள் மாத்­தி­ரமே விண்­ணப்­பித்­தி­ருந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

துடுப்பாட்டம், பந்­து­ வீச்சு, களத்­த­டுப்பு போன்­ற­வற்­றுக்­கான பயிற்­று­நர்­களை இந்­திய கிரிக்­கெட்டின் பிர­தம தெரி­வாளர் எம். எஸ். கே. பிரசாத் தேர்ந்­தெ­டுப்பார்.

இந்­திய கிரிக்கெட் அணியின் தற்­போ­தைய தலைமைப் பயிற்­றுநர் ரவி ஷாஸ்­திரி மீண்டும் பயிற்­றுநர் பத­விக்கு தெரி­வா­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம் இருப்­ப­தா­கவும் அவ­ருக்கு இந்­திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்­லியின் ஆத­ரவு இருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

தலைமைப் பயிற்­று­நரைத் தெரிவு செய்யும் விட­யத்தில் கோஹ்­லியின் கருத்­துக்­க­ளையும் கபில் தேவ் தலை­மை­யி­லான கிரிக்கெட் ஆலோசனைக் குழு கவனத்தில் கொள்ளவுள்ளது. இந்­திய கிரிக்கெட் ஆலோ­சனைக் குழுவில் கபில் தேவுடன் அன்­ஷுமான் கயேக்வாட், ஷான்தா ரங்­க­சு­வாமி ஆகி­யோரும் இடம்­பெ­று­கின்­றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!