தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான திறன்காண் லேட்டன் கிண்ண குத்துச்சண்டை இன்று ஆரம்பம்

0 21

(நெவில் அன்­தனி)

தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை சார்­பாக பங்­கு­பற்­ற­வுள்ள குத்­துச்­சண்டை வீர, வீராங்­க­னை­களைத் தெரிவு செய்­வ­தற்­கான இறுதித் தேர்வுப் போட்­டி­யாக அமையும் லேட்டன் கிண்ண குத்­துச்­சண்டைப் போட்டி இன்று முதல் எதிர்­வரும் சனிக்­கி­ழ­மை­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

125 வீரர்­களும் 37 வீராங்­க­னை­களும் பங்­கு­பற்றும் இப் போட்டி கொழும்பு 7இல் அமைந்­துள்ள றோயல் மாஸ் குத்­துச்­சண்டை அரங்கில் நடை­பெ­ற­வுள்ளது. லேட்டன் கிண்ண குத்­துச்­சண்டைப் போட்­டியை இலங்கை குத்­துச்­சண்டை சங்கம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

நேபா­ளத்தின் கத்­மண்­டு­விலும் பொக்­கா­ரா­விலும் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திக­தி­முதல் 10ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான இலங்கை குத்­துச்­சண்டை வீர, வீராங்­க­னை­களைத் தீர்­மா­னிக்கும் போட்­டி­யாக லேட்டன் கிண்ண குத்துச் சண்டைப் போட்டி அமை­வதால் கடும் போட்டி நிலவும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

பிரித்­தா­னிய ஆட்சிக் காலத்தில் 1942இல் விமா­னப்­ப­டையில் சேவை­யாற்­றிய அட்­மிரல் சேர் ஜெவ்றி லேட்­டனின் பெய­ரி­லேயே குத்­துச்­சண்டைப் போட்டி நடத்­தப்­பட்டு வரு­கின்­றது.  கடந்த வருடப் போட்­டியில் அதி சிறந்த குத்துச் சண்டை வீர­ராக விமா­னப்­ப­டையின் ஜீவன் குமா­ரவும் அதி சிறந்த குத்துச் சண்டை வீராங்­க­னை­யாக இரா­ணு­வத்தின் எல். ஜீ. சந்த்­ரிக்­காவும் தெரி­வா­கினர்.

ஆரம்­ப­வி­ய­லா­ளர்கள், இடை­நி­லை­யா­ளர்கள் , ஸ்டப்ஸ் கேடயம் ஆகிய குத்­துச்­சண்டைப் போட்­டி­களில் பங்­கு­பற்­றி­ய­வர்கள், கனிஷ்ட தேசிய குத்துச் சண்டைப் போட்­டியில் வெற்றி பெற்­ற­வர்கள் லேட்டன் கிண்ண குத்­துச்­சண்டைப் போட்­டியில் பங்­கு­பற்­றலாம் என இலங்கை குத்­துச்­சண்டைச் சங்க அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இப் போட்டி தேர்வுப் போட்­டி­யாக அமை­வதால் இதற்கு முன்னர் இலங்கை குத்­துச்­சண்டைச் சங்­கத்­தினால் நடத்­தப்­பட்ட லேட்டன் கிண்ணம், கிளிபர்ட் கிண்ணம், தேசிய குத்­துச்­சண்டைப் போட்டி ஆகி­ய­வற்றில் பங்­கு­பற்­றி­ய­வர்­களும் இவ் வருட லேட்டன் கிண்ண குத்­துச்­சண்டைப் போட்­டியில் பங்­கு­பற்ற அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

19 வய­துக்கும் 40 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் மாத்­தி­ரமே இப் போட்­டியில் பங்­கு­பற்ற அனு­ம­திக்­கப்­ப­டுவர்.இவ் வருடப் போட்­டியில் கெசு­வல்லைன், லினியா, விதியால், பேரா­தனை குத்­துச்­சண்டை கழகம், வித்யார்த்த கழகம், அப்ஹில் குத்துச்சண்டைக் கழகம், யுனிச்சேலா கழகம், இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் ஆகியவற்றைச் சேர்ந்த அதி சிறந்த குத்துச்சண்டை வீர, விராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!