லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைக்கும் செயற்பாடுகளில் ஐ.சி.சி.

0 692

உலகின் மிகப்­பெ­ரிய விளை­யாட்டு விழா­வான ஒலிம்­பிக்கில் கிரிக்கெட் சேர்க்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தற்­கான முன்­னேற்­ற­கர செயற்­பா­டுகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

மைக் கெட்டிங்

 

லோர்ட்சில் அமைந்­துள்ள எம்.சி.சி. கிரிக்கெட் குழு­விடம் இது குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் புதிய பிர­தம நிறை­வேற்று அதி­காரி மானு சவ்னி தெரி­வித்­த­தாக எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழுத் தலைவர் மைக் கெட்டிங் கூறி­யுள்ளார்.

ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் கிரிக்கெட் சேர்க்­கப்­ப­டு­வதை பல நாடுகள் விரும்பும் அதே­வேளை, இந்­தியா முதல் தட­வை­யாக தனது இசைவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளதால் நீண்­ட­கா­ல­மாக நில­வி­வரும் எதிர்­பார்ப்பு நிறை­வே­றக்­கூ­டி­ய­தாக இருக்கும் என சவ்னி கூறி­ய­தாக மைக் கெட்டிங் குறிப்­பிட்டார்.

‘‘2028 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் கிரிக்கெட் விளை­யாட்டை சேர்க்க முடியும் என்ற அதீத நம்­பிக்கை இருப்­ப­தாக எம்­மு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின்­போது சவ்­னி தெரி­வித்தார். அதற்­கான முயற்­சி­களில் அவர்கள் (சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை) தற்­போது ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் ஒலிம்­பிக்கில் கிரிக்கெட் சேர்க்­கப்­பட்டால் அது முழு கிரிக்கெட் உல­குக்கும் கிடைக்கும் போன­சா­கவும் அற்­புத­மா­ன­தா­கவும் அமையும்’’ என்றார் மைக் கெட்டிங்.

‘‘ஒலிம்­பிக்கில் இணை­வ­தற்­கான முயற்­சி­களில் அடுத்த 18 மாதங்கள் முக்­கிய பங்­காற்­ற­வுள்­ளது. ஒலிம்­பிக்கில் இணை­வ­தாக இருந்தால் தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னையை தவிர்க்கும் விடயம் பிர­தா­ன­மாக கருத்தில் கொள்­ளப்­படும்.

இவ் விடயம் குறித்து தேசிய ஊக்­க­ம­ருந்து பாவனைத் தடுப்பு நிறு­வ­னத்­துடன் (நாடா) தற்­போது இந்­தியா இணைந்து செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. இது கிரிக்கெட் விளை­யாட்டு ஒலிம்­பிக்கில் இணை­வ­தற்கு மிகவும் அனு­கூ­ல­மாக அமையும்’’ என மைக் கெட்டிங் மேலும் தெரி­வித்தார்.

இலங்­கையில் பாது­காப்பு
எம்.சி.சி.யின் உலக கிரிக்கெட் குழுக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்ட மற்­றைய விட­யங்­களில் இலங்­கையில் உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களின் பின்னர் பாது­காப்பு குறித்தும் பாகிஸ்­தானில் பாது­காப்பு குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இலங்கை அணி­யினர் பயணம் செய்த பஸ்­வண்டி மீது பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் பின்னர் பாகிஸ்­தானில் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டிகள் பெரும்­பாலும் நடை­பெ­ற­வில்லை. எவ்­வா­றா­யினும் இலங்­கைக்­கான இங்­கி­லாந்து கிரிக்கெட் விஜயம் திட்­ட­மிட்­ட­படி அமையும் என எதிர்­பார்ப்­ப­தாக எம்.சி.சி. கிரிக்கெட் குழு உறுப்­பினர் குமார் சங்­கக்­கார தெரி­வித்தார்.

‘‘சகல நாடு­களும் தத்­த­மது நாடு­களில் பாது­காப்பு மற்றும் அச்சு­றுத்தல் குறித்து சுயா­தீ­ன­மாக மதிப்­பீடு செய்யும். இந்தக் கேள்­வி­க­ளுக்­கெல்லாம் சுமு­க­மான தீர்வு எட்­டப்­பட்­டுள்­ள­தென நான் கரு­து­கின்றேன்’’ என்றார் குமார் சங்­கக்­கார.

‘‘இலங்­கைக்­கான இங்­கி­லாந்து கிரிக்கெட் விஜ­யத்தில் மாற்றம் ஏற்­படும் என நான் கரு­த­வில்லை. ஆனால், கலந்­து­ரை­யா­டல்கள் நடைபெறலாம். இலங்கையில் பிரச்சினைகள் உக்கிரமாக இடம்பெற்ற வேளையில் நான் இலங்கைக்காக விளையாடினேன். வெளிநாட்டு அணிகள் இலங்கைக்கு வருகை தந்தபோது அவற்றுக்கென விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன’’ என்பதை குமார் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!