இருபாலாருக்குமான குறுந்தூர ஓட்ட நிகழ்ச்சிகளில் கடும் போட்டி 

0 110

(எம்.எம்.சில்­வெஸ்டர்)

கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் நாளை மறு­தினம் வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள 97ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்­கேற்கும் குறுந்­தூர ஓட்ட நிகழ்ச்­சி­களில் பலத்த போட்டி நிலவும் என ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­தனர்.

 

ஒவ்­வொரு நிகழ்ச்­சி­யிலும் வெற்­றி­பெ­று­பவர் மாத்­தி­ரமே தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்ற முடியும் என்­பதால் இரு­பா­லா­ருக்­கு­மான குறுந்­தூர ஓட்டப் போட்­டி­களில் கடும் போட்டி நிலவும் என்­பது உறுதி.பெண்­க­ளுக்­கான குறுந்­தூர ஓட்டப் போட்­டி­களில் அமாஷா டி சில்வா, செலிண்டா ஜென்சன், ஷர்­மிலா ஜேன், சதீப்பா ஹெண்­டர்சன், ருமே­ஷிகா ரட்­நா­யக்க ஆகியோர் பங்­கு­பற்­ற­வுள்­ளனர். 

கடந்த வருடம் நடை­பெற்ற 96ஆவது மெய்­வல்­லுநர் போட்­டியில் பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் (11.72 செக்.) மற்றும் 200 மீற்றர் (24.26 செக்.) ஆகிய இரண்டு நிகழ்ச்­சி­க­ளிலும் வெற்­றி­பெற்ற ருமே­ஷிகா ரட்­நா­யக்க இம்­முறை கடும் சவாலை எதிர்­கொள்ள வாய்ப்­புள்­ளது.

கடந்த வருடம் இளையோர் மெய்­வல்­லுநர் போட்­டியில் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்­சி­களில் முதல் மூன்று இடங்­களை பிடித்த, அமாஷா, ஷர்­மிலா, செலிண்டா ஆகியோர் முதல் தட­வை­யாக தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பங்­கு­பற்­ற­வுள்­ளதால் இம்­முறை பெண்­க­ளுக்­கான குறுந்­தூர ஓட்ட நிகழ்ச்­சி­களில் கடும் போட்டி நிலவ வாய்ப்­புள்­ளது.

இந்­தி­யாவின் புப­ணேஷ்வர் நகரில் 2017இல் நடை­பெற்ற ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ருமே­ஷிகா ரட்­நா­யக்க, இவ் வருடம் ஒரே ஒரு 200 மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் மாத்­தி­ரமே பங்­கேற்­றுள்ளார்.

அவரால் பதி­வு­செய்­யப்­பட்ட 24.62 செக்­கன்கள் என்ற நேரப் பெறுதி அவ­ரது தனிப்­பட்ட சிறந்த நேரப் பெறு­தியை (23.40 செக். 2017) அண்­மிக்­க­வில்லை.

 200 மீற்றர்  ஒட்டப் போட்­டியில் 400 மீற்றர் ஓட்ட வீராங்­கனை நதீஷா ராம­நா­யக்­கவும் பங்­கேற்­க­வுள்ளார்.

400 மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் நதீஷா ராம­நா­யக்க, ரத்ன குமாரி ஆகி­யோ­ருடன் இளம் வீராங்­க­னை­யான டில்ஷி ஷியா­மலி ஆகிய  மூவ­ருக்­கி­டையில் கடும் போட்டி நிலவும்.

இவ் வருடம் நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில்  அமாஷா டி சில்வா (11.90 செக்.), 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் செலிண்டா ஜென்சன் (24.41 செக்.), 400 மீற்றர் நதீஷா ராம­நா­யக்க (53.18 செக்­கன்கள்) ஆகியோர் தத்­த­மது தனிப்­பட்ட அதி­சி­றந்த நேரப் பெறு­தி­களைப் பதிவு செய்­துள்­ளனர்.

இதே­வேளை, ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் ஹிமாஷா ஏஷான் (10.22 செக்.), வினோஜ் சுரஞ்­சய (10.27 செக்.) , யுப்புன் அபேக்கோன் (10.45 செக்.), மொஹமத் சபான்(10.52 செக்.), சானுக்க சந்­தீப்ப (10.57 செக்.), ஷெஹான் அம்­பேப்­பிட்­டிய (10.57 செக்.)  ஆகி­யோ­ரி­டையே கடும் போட்டி நில­வலாம். எனினும், ஹிமாஷா ஏஷான், வினோஜ் சுரஞ்­சய இரு­வரில் ஒருவர் வெற்­றி­பெ­று­வ­தற்­கான அதி­கப்­பட்ச வாய்ப்பு உள்­ளது.

திய­க­மவில் சில மாதங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் தகு­திகாண் ஓட்டப் போட்­டியை 20.50 செக்­கன்­களில் நிறைவு செய்த வினோஜ் சுரஞ்­ச­ய­வுக்கு ஏஷான், சபான் ஆகியோர் சவால் விடுப்பர் என எதிர்­பா­ர்க்­கப்­ப­டு­கின்­றது.

ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இளம் வீரர் அருண தர்­ஷன முத­லி­டத்தை வென்­றெ­டுப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்­சியில் திற­மை­சா­லி­யான காலிங்க குமார தடை­செய்­யப்­பட்ட ஊக்க மருந்து பாவ­னையில் சிக்­கி­யதால் அவ­ருக்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அருண தர்­ஷ­ன­வுக்கு அஜித் பிரே­ம­கு­மார மற்றும் இளம் வீர­ரான பசிந்து கொடி­கார, பப­சர நிக்கு ஆகியோர் சவாலாக விளங்க வாய்ப்புள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!