கொழும்பிலிருந்து புத்தளத்துக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது

0 805

(முஹம்மட் ரிபாக்)

கொழும்பிலிருந்து புத்தளத்துக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று புத்தளம் கரிக்கட்டைப் பகுதியில்  இன்று விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் குறித்த டிப்பர் வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து அருவக்காலு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துச் சம்பவம் இடம்பெற்ற போது சாரதி மட்டுமே பயணித்துள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த சாரதி புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, விபத்துக்குள்ளான டிப்பர் வண்டியில் கொழும்பில் இருந்து எடுத்துவரப்பட்ட குப்பைகளை பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் மற்றுமொரு டிப்பர் வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால், அந்த பகுதியில் சில மணிநேரம் துர்நாற்றம் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!