கஞ்சிபான இம்ரானுடன் சிஐடி அதிகாரிகள் நெருக்கமான தொடர்பு என முறைப்பாடு!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள்!

0 92

                                                                                                                             (ரெ.கிறிஷ்ணகாந்)
கஞ்சிபான இம்ரானுடன் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் நெருக்கமான தொடர்பைப் பேணுவதாக மாகல்கந்தே சுதந்த தேரரினால் பொலிஸ் தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடு, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால், விசாரணைகளுக்காக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது தடுப்புக்காவலிலுள்ள மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் அல்லது கஞ்சிப்பான இம்ரான் எனப்படும் பாதாள குழு உறுப்பினருடன் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சிலர், நெருங்கிய தொடர்புகளை பேணிவருவதாகவும் அவர்கள் தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாகல்கந்தே சுதந்த தேரர் பொலிஸ் தலைமையகத்தில் அண்மையில் முறைப்பாடொன்றை கையளித்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!