இராணுவத் தலைமையகத்தில் சிப்பாய் தற்கொலை: காதல் விவகாரம் என பொலிஸார் சந்தேகம்

0 239

                                                                                                                         (எம்.எப்.எம்.பஸீர்)
இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று  (14) அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தில் பொறியியல் படைப் பிரிவைச் சேர்ந்த  27 வயதான பொலன்னறுவை –  அத்தனகடவல பகுதியை வதிவிடமாக கொண்ட  மனோஜ் மதுசங்க என்ற இராணுவ வீரரே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக  பொலிஸார் கூறினர். தனது  பிறந்த தினத்தன்று இவ்வாறு அவர்  தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கோட்டை பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,  காதல் விவகாரம் இந்த தற்கொலைக்கு காரணம் என நம்பும்படியான சான்றுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

.இதனிடையே அண்மைக் காலமாக காதல்  விவகாரத்தை மையப்படுத்தி தற்கொலை செய்துகொள்ளும் படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்த 15 நாட்களுக்குள் இவ்வாறு காதல் விவகாரத்தால் தற்கொலை செய்துகொள்ளும் மூன்றாவது படை வீரராக நேற்று தற்கொலை செய்த வீரர் பதிவாகியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!