மைத்திரி அலையில் மக்கள் அள்ளுண்டு போனதால் ஒப்பந்தங்களைச் செய்ய முடியவில்லை! ஹரீஸ் எம்.பி

0 611

                                                                                       (நூறுள் ஹுதா உமர்)
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை விட அமைச்சுப் பதவி பெரிதானது அல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் மைத்திரி அலையில் அள்ளுண்டு போனதால் அரசியல் தலைமைகளுக்கு இந்த அரசை அமைக்க எந்தவித ஒப்பந்தங்களும் இல்லாமல் ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டது. அது போன்று இம்முறை செய்ய முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளை கொண்டு திட்டமிடப்பட்ட அபிவிருத்தி செய்து முடிக்க வேண்டும். கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பெரிய இரு இனங்களான சிங்கள, தமிழ் மக்களின் மனோநிலை வேறுவிதமாக காணப்படுகிறது.

நெருக்கடியான இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவசரப்பட்டு எந்த தீர்மானங்களும் எடுக்க முடியாது. கடந்த காலங்களை விட இந்த தேர்தல் கடினமாக இருக்கும் என்பதால் அலசி ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவோம்.

பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை அடையாளப்படுத்த இப்போதுதான் ஆரம்பித்துள்ளார்கள். நாங்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ முடியாது. அண்மையில் தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெற்ற மாநாட்டில் இதனைத் தெளிவாக கூறியுள்ளோம் திருமணச் சட்டம், காதி நீதிமன்ற விவகாரம், நிகாப் பிரச்சினை அடங்கலாக பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்த்து வைக்க வேண்டும். அதை செய்யாமல் அமைச்சர் பதவியை பெற்று கொள்ள முடியாது. எங்களின் கூட்டு இராஜினாமா மூலம் சர்வதேச அழுத்தங்கள் இந்த நாட்டு பரவலாக வரத்தொடங்கியுள்ளது. எங்களின் ஒற்றுமையான பயணத்தின் மூலம் நாங்கள் எமது நாட்டில் வாழும் முஸ்லிங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்தது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!