இந்தியாவுக்கு பாடம் கற்பிக்க சரியான தருணம் வந்துள்ளது -இம்ரான் கான்

0 150

இந்­தி­யா­வுக்கு பாடம் கற்­பிப்­ப­தற்கு சரி­யான தருணம் வந்­துள்­ளது என பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் நேற்று கூறி­யுள்ளார். பாகிஸ்­தானின் காஷ்மீல் இந்­தியா இரா­ணுவ நட­வ­டிக்கை எதுவும் மேற்­கொண்டால், கடும் பதி­லடி கொடுக்­கப்­படும் எனவும் அவர் கூறினார்.

காஷ்மீர் சட்டசபைக்கு  பிர­தமர் இம்ரான் கான்  நேற்று சென்றபோது

 

பாகிஸ்தான் நேற்று தனது 73 ஆவது சுதந்­திர தினத்தை கொண்­டா­டி­யது. இந்­நி­லையில் பிர­தமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கட்­டுப்­பாட்­டி­லுள்ள காஷ்மீர் மாகா­ணத்­துக்கு (ஆஸாத் காஷ்மீர்) விஜயம் செய்தார். காஷ்மீர் மக்­க­ளு­ட­னான ஒரு­மைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் வகையில் அவர் அங்கு விஜயம் செய்தார்.

பாகிஸ்தான் கட்­டுப்­பாட்­டி­லுள்ள காஷ்­மீரின் தலை­நகர் முஸா­ப­ரா­பாத்­தி­லுள்ள காஷ்மீர் சட்­ட­ச­பையில் பிர­தமர் இம்ரான் கான் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், இந்­தியா தீவி­ர­வாத சித்­தாந்­தத்­துடன் பேர­ழிவை நோக்கி செல்­கி­றது. இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி பெரிய தவறை செய்து கொண்­டி­ருக்­கிறார் எனவும் கூறினார்.

அவர்கள் பாகிஸ்­தானின் காஷ்­மீரில் எதையோ செய்ய திட்­ட­மி­டு­கி­றார்கள் என பாகிஸ்தான் இரா­ணு­வத்­துக்கு தகவல் கிடைத்­துள்­ளது. அவர்கள் தயா­ரா­க­வுள்­ளார்கள். அவர்­க­ளுக்கு நாம் கடும் பதி­லடி கொடுப்போம். நான் நரேந்­திர மோடிக்கு ஒன்றை சொல்லிக் கொள்­கிறேன்.

பாகிஸ்தான் நிர்­வா­கத்­துக்­குட்­பட்ட காஷ்­மீரில் இந்­திய இரா­ணுவம் கலகம் மூட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு அதி­க­மாக பதி­லடி தருவோம்,’ என்றார். தற்­போது காஷ்­மீ­ருக்கு மோடி செய்து கொண்­டி­ருப்­பது, ஹிட்­லரின் ‘இறுதி தீர்வு’ போன்று உள்­ளது.

18 கோடி முஸ்­லிம்கள் இந்­தி­யாவில் அச்­சு­றுத்­த­லோடு வாழ்­கி­றார்கள். இந்த முடிவு இறு­தியில் பின்­ன­டை­வையே ஏற்­ப­டுத்தும். உலகில் எங்­கெல்லாம் மக்கள் ஒதுக்­கப்­ப­டு­கி­றார்­களோ அங்கு தீவி­ர­வாதம் உரு­வா­கும்.

ஆர்­எஸ்­எஸ்ஸின் குண்­டர்கள் மக்­களை கொல்­கி­றார்கள், நீதி­ப­தி­களை மிரட்­டு­கி­றார்கள். இத­னைத்தான் நாஸிகள் செய்­தார்கள். ஆர்­எஸ்எஸ் சித்­தாந்­த­மா­னது, அப்­ப­டியே நாஸி­களின் சித்­தாந்தம் போல் உள்­ளது என்­பதை இந்த உல­கத்­திற்கு தெரிய வைக்க வேண்டும்.

2 ஆம் உலகப் போர் முடிந்த பிறகு, இன­அ­ழிப்பு இனி நடக்­காது என்று கூட்­டாக முடி­வெ­டுக்­கப்­பட்­டது. ஆனால், ஆர்­எஸ்எஸ் சித்­தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்­கி­றது.

 
ஹிட்­லரின் ஆணவப் போக்­கிற்கும், நரேந்­திர மோடியின் ஆணவப் போக்­கிற்கும் வித்­தி­யாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்­கப்­பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!