தண்ணீர் செலவை குறைப்பதற்காக 150 மாணவிகளின் தலை முடியை வெட்டிய பாடசாலை அதிபர்

0 2,136

தண்ணீர் செலவை குறைப்­ப­தற்­காக சுமார் 150 மாண­வி­களின் தலை முடியை பாட­சாலை அதி­பரின் உத்­த­ர­வின்­பேரில் வெட்­டிய சம்­பவம் இந்­தி­யாவின் தெலுங்­கானா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இச்­சம்­பவம் நேற்­று­முன்­தினம் அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.

தெலுங்­கானா மாநி­லத்தில் மெதக் நக­ரி­லுள்ள அரச பாட­சா­லை­யொன்றில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு உள்ள மாண­விகள் தங்கி கல்வி கற்று வரு­கி­றார்கள்.

இந்த மாண­வி­க­ளுக்­கான விடு­தியில் தங்கும் இடம், உணவு அனைத்தும் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்டு வரு­கி­றது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இங்கு கடு­மை­யான தண்ணீர் தட்­டுப்­பாடு நில­வி­யது.

ஆழ்­குழாய் கிணறு வரண்­டதால் 3 நாட்­க­ளுக்கு ஒரு­முறை பவுஸர் மூலம் தண்ணீர் வினி­யோகம் செய்­யப்­பட்­டது. இதற்கு அதிக செலவு ஆகி­யது.

பாட­சாலை மாண­விகள் குளிப்­ப­தற்கு அதிக அளவில் தண்ணீர் செல­வ­ழிப்­ப­தாக அதிபர் கே. அருணா ரெட்டி கூறினார். மாண­வி­க­ளுக்கு தலை­முடி நீள­மாக இருப்­பதால் தான் குளிப்­ப­தற்கு அதிக தண்ணீர் செலவு ஆவ­தாக கரு­தினார்.

இதை­ய­டுத்து சிகை­ய­லங்­காரக் கலை­ஞர்கள் இரு­வரை அழைத்த அதிபர் கே. அருணா ரெட்டி, அங்கு தங்கி பயின்ற 150 மாண­வி­களின் தலை முடி­யையும் வெட்ட உத்­த­ர­விட்டார். தலை­மயிர் கத்­த­ரிப்­ப­தற்­காக தலா 25 இந்­திய ரூபா பணமும் மாண­வி­க­ளிடம் வசூ­லிக்­கப்­பட்­டது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மேற்­படி மாண­வி­களின் விடு­திக்கு பெற்றோர் சிலர் சென்­ற­போது, தமது மகள்மார் குட்­டை­யான தலை­மு­டி­யுடன் இருப்­பதைக் கண்டு வியப்­ப­டைந்­தனர். அதி­பரின் உத்­த­ர­வின்­பேரில் தமது தலை­முடி வெட்­டப்­பட்­ட­தாக மாண­விகள் கூறி­யதைக் கேட்டு பெற்றோர் ஆத்­தி­ர­ம­டைந்­த­னர். இத­தை­ய­டுத்து, அதி­ப­ருக்கு எதி­ராக பாட­சாலை முன்னால் பெற்றோர் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர்.

இந்த நிலையில், நேற்று மாண­வி­களை சந்­திப்­ப­தற்­காக அவர்­க­ளது பெற்­றோர்கள் வந்­தனர். அப்­போது தங்கள் பெண் குழந்­தைகள் முடி­வெட்­டப்­பட்டு இருப்­பதை கண்டு அதிர்ச்சி அடைந்­தனர்.

இதே­வேளை, இது குறித்து பாட­சாலை அதிபர் கே. அருணா கூறு­கையில், மாண­விகள் பலரின் தலையில் பேன் இருந்­த­தாலும் சிலர் நோய்­க­ளுக்கு ஆளா­கி­யி­ருந்­த­மை­யாலும் தலை­ம­யிரை கத்­த­ரிப்­ப­தற்கு தான் உத்­த­ர­விட்­ட­தாக கூறினார். அத்­துடன் தண்ணீர்த் தட்­டுப்­பாடும் ஒரு காரணம் என அவர் ஒப்­புக்­கொண்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!