அறுகம்பை சர்வதேச அரை மரதன் ஓட்டப் போட்டி; ஆண்களில் இலங்கையர், பெண்களில் வெளிநாட்டவர் வெற்றி

0 85

(அஸ்ஹர் இப்­றாஹிம்)

அறு­கம்பை சர்­வ­தேச அரை மரதன் (21.1 கிலோ மீற்றர்) ஓட்டப் போட்­டியில் ஆண்­க­ளுக்­கான பகி­ரங்க பிரிவில் உள்­நாட்­ட­வர்­களும் பெண்­க­ளுக்­கான பகி­ரங்க பிரிவில் வெளி­நாட்­ட­வர்­களும் வெற்­றி­பெற்­றனர்.

கொலன்­னா­வையைச் சேர்ந்த பார்வைக் குறை­பா­டு­டைய காலித் உஸ்மான் இப்­போட்­டியில் கலந்­து­கொண்­டமை விசேட அம்­ச­மாகும்.. பார்வைக் குறை­பா­டு­டைய நிலையில் 21.1 கிலோ மீற்றர் தூரத்­தையும் நிறை­வு­செய்த இவரைப் பாராட்டி பணப்­ப­ரிசில் வழங்­கப்­பட்­டது.

ஆண்­க­ளுக்­கான பகி­ரங்கப் பிரிவில் வத்­தே­க­மையைச் சேர்ந்த நிசான் மது­ரங்க வெற்­றி­பெற்­ற­துடன் நுவ­ரெ­லி­யாவைச் சேர்ந்த அருண பண்­டார இரண்­டா­மி­டத்­தையும், அவி­சா­வ­ளையைச் சேர்ந்த கெலும் தர்­ம­ரத்ன மூன்­றா­மி­டத்­தையும் பெற்­றனர்.

பெண்­க­ளுக்­கான பகி­ரங்கப் பிரிவில் பிரான்ஸைச் சேர்ந்த எமிலி ஒலிவர் வெற்­றி­பெற்றார். இங்­கி­லாந்தைச் சேர்ந்த ஏஞ்­ச­லினா பென்­டின்­பரோ இரண்­டா­மி­டத்­தையும், பிரான்ஸைச் சேர்ந்த பிரான்­செஸ்கா பொனா­சியோ மூன்றாம் இடத்­தையும் பெற்­றனர்.

அரை மரதன் ஓட்டப் போட்­டியில் 12 வெளி­நா­டு­களைச் சேர்ந்த 60 வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்­றி­ய­துடன் இலங்­கையைச் சேர்ந்த 140 வீரர்­களும் பங்­கு­பற்­றினர்.

21.1 கிலோ மீற்றர் அரை மரதன், 10 கிலோ மீற்றர் வீதி ஓட்டப் போட்டி, இரண்டு பிரி­வி­ன­ருக்­கான 5 கிலோ மீற்றர் வீதி ஓட்டப் போட்டி என்­பன நடத்­தப்­பட்­டன. 5 கிலோ மீற்றர் ஓட்டப் போட்­டியில் 17 வய­துக்­குட்­பட்ட சிறு­வர்­களும், 45வய­துக்கு மேற்­பட்ட முதி­ய­வர்­களும் பங்­கு­பற்­றினர்.

10 கிலோ மீற்றர் ஓட்டப் போட்­டியில் ஆண்கள் பிரிவில் அவி­சா­வ­ளையைச் சேர்ந்த விமல் காரி­ய­வசம், பெண்கள் பிரிவில் ஆஸ்­தி­ரி­யாவைச் சேர்ந்த அனா பெட்சோல்ட் ஆகியோர் வெற்­றி­பெற்­றனர். சிறு­வர்­க­ளுக்­கான 5 கிலோ மீற்றர் ஓட்டப் போட்­டியில் பொத்­துவில் பிர­தே­சத்தைச் சேர்ந்த முஹாரி அகமட் முத­லா­மி­டத்தைப் பெற்றார்.

முதி­யோ­ருக்­கான 5 கிலோ மீற்றர் ஓட்டப் போட்­டியில் ஆண்கள் பிரிவில் நெதர்­லாந்தைச் சேர்ந்த டிம் பிலன்கொப்ட், பெண்கள் பிரிவில் இங்­கி­லாந்தைச் சேர்ந்த லிஸ் ஹெய்லர் ஆகியோர் வெற்­றி­பெற்­றனர்.

வெற்­றி­பெற்­ற­வர்­க­ளுக்கு பணப்­ப­ரி­சில்­க­ளுடன் சான்­றி­தழ்கள் வழங்­கப்­பட்­ட­துடன் பகி­ரங்க பிரி­வு­களில் வெற்­றி­பெற்ற இரு­வ­ருக்கு அறு­கம்பை நிறு­வ­னத்தின் சுற்­று­லாத்­துறை சொகுசு விடு­தியில் ஒரு தினம் இல­வ­ச­மாக தங்­கிச்­செல்­வ­தற்­கான விசேட பரிசு வழங்­கப்­பட்­டது.

சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­விக்கும் பொருட்டு, இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­புவோம் எனும் தொனிப்பொருளில் இப் போட்டியை அப்ரோட்டா விலாஸ் அறுகம்பை நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம், இலங்கை சுற்றுலாத்துறை மேம்படுத்தல் பணியகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!