அகில இலங்கை வலுதூக்கல் போட்டியில் யாழ். பெண்கள் சம்பியன்: அதி சிறந்த வலுதூக்கல் வீராங்கனை ஆஷிகா, வீரர் திவானுஜன்

0 1,258

(களுத்­துறை என். ஜெய­ரட்னம்)

இலங்கை வலு தூக்கல் (பவர் லிவ்டிங்) சங்­கத்­தினால் பண்­டா­ர­க­மையில் நடத்­தப்­பட்ட அகில இலங்கை வலு­தூக்கல் போட்­டியில் யாழ்ப்­பாணம் வலு­தூக்கல் விளை­யாட்டுக் கழக பெண்கள் அணி­யினர் இளையோர் மற்றும் சிரேஷ்ட பிரி­வுகள் இரண்­டிலும் ஒட்­டு­மொத்த சம்­பி­ய­னா­கினர்.

 

இப் போட்­டி­களில் யாழ். வலு­தூக்கும் கழ­கத்தைச் சேர்ந்த ஆஷிகா விஜ­ய­பாஸ்­கரன் இளையோர் பிரிவில் மொத்­த­மாக 295 கிலோ கிராம் எடையைத் தூக்கி (ஸ்னெச் 125 கி.கி., பென்ச் ப்ரெஸ் 40 கி.கி., டெட் லிவ்டிங் 130 கி.கி.) தங்கப் பதக்­கத்­துடன் அதி சிறந்த வலு­தூக்கும் வீராங்­க­னை­யா­கவும் சிரேஷ்ட பிரிவில் மொத்­த­மாக 300 கிலோ கிராம் எடையைத் தூக்கி (ஸ். 127.5 கி.கி., பெ. 42.5 கி.கி., டெ. 130 கி.கி.) தங்கப் பதக்­கத்­துடன் ஒட்­டு­மொத்த அதி சிறந்த வலு­தூக்கும் வீராங்­க­னை­யா­கவும் தெரி­வானார்.

நேபா­ளத்தில் இவ் வருட இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான பளு­தூக்கல் போட்­டி­க­ளு­க­கான இலங்கை முன்­னோடி குழாத்­திலும் ஆஷிகா இடம்­பெ­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இளையோர் ஆண்கள் பிரிவில் எஸ். திவா­னுஜன் மொத்­த­மாக 320 கிலோ கிராம் எடையைத் தூக்கி (ஸ். 130 கி., பெ. 55 கி., டெ. 135 கி.) தங்கப் பதக்­கத்­துடன் ஒட்­டு­மொத்த அதி சிறந்த வலு­தூக்கும் வீர­ரா­கவும் தெரி­வானார்.

நாடு முழு­வ­தி­லு­மி­ருந்தும் இரு­ப­துக்கும் மேற்­பட்ட வலு­தூக்கும் கழ­கங்கள் பங்­கு­பற்­றிய அகில இலங்கை வலு­தூக்கும் போட்டி பண்­டா­ர­க­மையில் கடந்த சனி, ஞாயிறு தினங்­களில் நடை­பெற்­றன.

முதலாம் நாள் கனிஷ்ட மற்றும் இளையோர் பிரி­வு­க­ளுக்­கான போட்­டி­களும் இரண்டாம் நாள் சிரேஷ்ட பிரி­வுக்­கான போட்­டி­களும் நடத்­தப்­பட்­டன.

யாழ். வலு­தூக்கல் கழகம் சார்­பாக போட்­டி­யிட்­ட­வர்­களில் ஒரு­வரைத் தவிர மற்­றைய அனை­வரும் பதக்­கங்கள் வென்­ற­துடன் யாழ். வலு­தூக்கும் கழக வீர, வீராங்கனைகளின் பயிற்றுநரான ஆர். விஜயபாஸ்கரன், மாஸ்டர்ஸ் பிரிவில் போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்றமை விசேட அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!