வர்த்தக நிலையங்களின் வாசற்படிகளில் மலம் கழிக்கும் நபரால் கம்பளை வர்த்தகர்கள் அசௌகரியம்

0 406

(கம்­பளை நிருபர்)

தமது வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு முன்னால் ஒருவர் இரவு நேரங்­களில் மலம் கழித்து வரு­வ­தனால் தாம் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­வ­தாக கம்­பளை நகர வர்த்­த­கர்கள் தெரி­விப்­ப­தோடு குறித்த நபரை கட்­டுப்­ப­டுத்த சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் ஆவன செய்ய வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

நகரில் மனித நட­மாட்­ட­மற்ற பல இடங்கள் இருந்­த­போதும் குறித்த நபர் அதி­க­மாக நகர் மத்­தி­யி­லி­ருக்கக் கூடிய வர்த்­தக நிலை­யங்­களைத் தெரிவு செய்து சரி­யாக வாசற்­ப­டி­யி­லேயே மலம் கழிப்­ப­தனை வழக்­க­மாக கொண்­டி­ருப்­ப­தாக மேற்­படி வர்த்­த­கர்கள் தெரி­விப்­ப­தோ­டு­ கு­றித்த காட்­சிகள் கண்­கா­ணிப்பு கெம­ராக்­க­ளிலும் பதி­வா­கி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.

இந்த நபரின் முறை­யற்ற செயலால் தமது வியா­பார நிலை­யங்­களை உரி­ய­நே­ரத்­திற்கு திறக்க முடி­யாமல் சில சம­யங்­களில் பணம் செல­வ­ழித்தும் மணித்­தி­யாலக் கணக்கில் குறித்த கழி­வு­களை அகற்ற ஆட்­களைத் தேடித் திரிய வேண்­டி­யுள்­ள­தா­கவும் வர்த்­த­கர்கள் தெரி­விக்­கின்­றனர்.

குறித்த நபரை இனம் கண்டு அவ­ரைத் தண்­டிக்­க பொலி­ஸாரோ அல்­லது கம்­பளை நகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இரவு நேரக் காவல் பிரிவினரோ ஆவன செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!