ஆனைவிழுந்தாவ பறவைகள் சரணாலயத்துக்கு அருகில் வீழ்ந்து காணப்பட்ட இலங்கையில் இதுவரை கண்டறியப்படாத பறவை

0 1,604

இலங்­கையில் இது­வ­ரையில் கண்­ட­றி­யப்­ப­டாத இனந்­தெ­ரி­யாத பற­வை­யொன்று ஆனை­வி­ழுந்­தாவ பற­வைகள் சர­ணா­ல­யத்­துக்கு அண்­மை­யி­லுள்ள சிலாபம் – முது­பந்­திய தீவி­லி­ருந்து பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்டு வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைக்கப்பட்­டுள்­ளது.

 

இந்தப் பறவை கடந்த 12 ஆம் திகதி இரவு குறித்த தீவுக்கு வந்­துள்­ள­தா­கவும் பின்னர் பிர­தே­ச­வா­சி­களால் மேற்படி பறவை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் அலகு மற்றும் வால் பகுதி நீர்க்­கா­கத்தை ஒத்­த­தா­கவும், கால்கள் பருந்தின் கால்­களை ஒத்­த­தா­கவும் காணப்­ப­டு­வ­தா­கவும் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

அத்­துடன், இது தலா 109 சென்­ரி­ மீற்றர் நீளம் கொண்ட இரு இறக்­கை­களை கொண்­டுள்­ளது. இப்­ப­றவை தொடர்­பான தக­வல்­களை கண்­ட­றி­வ­தற்கு தொடர்ந்தும் முயற்­சித்து வரு­வ­தாக வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

ஆன­வி­ழுந்­தாவ பற­வைகள் சர­ணா­ல­யத்­துக்கு பல்­வேறு வெளி­நாட்டு பற­வைகள் வரு­கின்ற போதிலும், இந்த இனத்தைச் சேர்ந்த பற­வை­களை தாம் ஒரு­போதும் கண்­ட­தில்லை என பிர­தே­ச ­வா­சி­களும், வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ளனர்.

இப்­ப­ற­வையின் உடலில் சிறு­கா­யங்கள் இருப்பதால், சிகிச்சைகளுக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய பிரிவிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!