வவுனியாவில் மோட்டார் சைக்கிளினுள் புகுந்த வெள்ளை நாகம்!

0 211

(ஓமந்தை நிருபர், கதீஸ்)

வவு­னியா தாண்­டிக்­குளம் பகு­தியில் வெள்­ளை­நாகம் ஒன்று வீதிக்கு வந்­த­மையால் அதனை பார்­வை­யிட மக்கள் ஒன்­று­கூ­டி­ய­துடன் குறித்த பாம்பு மோட்டார் சைக்கிள் ஒன்­றுக்குள் புகுந்து கொண்ட சம்­பவம் நேற்றுக் காலை இடம்­பெற்­றது.

நேற்றுக் காலை தாண்­டிக்­குளம் உண­வ­கம் ஒன்றிக்கு அருகில் வயல்­வெ­ளியில் இருந்து வெள்ளை நாகம் ஒன்று வீதிக்கு வந்­துள்­ளது. வீதியால் சென்ற அனை­வரும் தமது வாக­னங்­களை நிறுத்­தி­விட்டு அந்தப் பாம்யை பார்­வை­யிட குவிந்­தனர்.

இத­னை­ய­டுத்து அந்த பாம்பு அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் கீழ்ப் பகு­திக்குள் மறைந்து கொண்­டது. இதனால் அதனை வெளியில் எடுப்­ப­தற்­காக அருகில் உள்ள சாந்­த­சோலை நாக­பூ­சணி அம்மன் ஆல­யத்­துக்கு குறித்த மோட்டார் சைக்கிள் கொண்டு செல்­லப்­பட்­டது.

அங்கு நின்ற ஒருவர் நாக­பாம்பை கையினால் பிடித்து எடுத்து ஆல­யத்தில் விட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. குறித்த சம்­ப­வத்­தினால் அப்­ப­கு­தியில் சற்று நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டி­ருந்­த­துடன் ஏ9 வீதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!