தென் ஆபிரிக்க டெஸ்ட் குழாத்தில் இந்திய வம்சாவளி தமிழர் சீனுரன்

0 44

இரு­வகை சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்­காக இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ள தென் ஆபி­ரிக்க டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தில் சீனுரன் முத்­து­சாமி உட்­பட மூன்று அறி­முக வீரர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் சீனுரன் முத்­து­சாமி இந்­திய வம்­சா­வளி தமிழர் எனக் கூறப்­ப­டு­வ­துடன் அவ­ரது இயற்­பெயர் சீனுராம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தென் ஆபி­ரிக்­காவின் கனிஷ்ட அணி, ஏ அணி ஆகி­ய­வற்றில் இடம்­பெற்ற சீனுரன், சக­ல­து­றை­க­ளிலும் பிர­கா­சித்­ததன் மூலம் தென் ஆபி­ரிக்க டெஸ்ட் குழாத்தில் இடம்­பி­டித்­துள்ளார்.

சக­ல­துறை வீர­ரான சீனுரன் முத்­து­சாமி 67 முதல்­தர கிரிக்கெட் போட்­டிகளில் விளை­யாடி 7 சதங்கள், 18 அரைச் சதங்கள் அடங்­க­லாக 3,375 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். இவர் இன்னிங்ஸ் ஒன்றில் அதி­கப்­பட்­ச­மாக 181 ஓட்­டங்­களைக் குவித்­துள்ளார். பந்­து­வீச்சில் ஏழு 5 விக்கெட் குவி­யல்கள், ஒரு 10 விக்கெட் குவியல் உட்­பட 128 விக்­கெட்­களைக் கைப்­பற்­றி­யுள்ளார்.

துடுப்­பாட்­டத்தில் முன்­வ­ரிசை வீர­ரான சீனுரன், 2017இல் உள்ளூர் முதல்­தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் வோன் வென் ஜார்ஸ்­வெல்­டுடன் இரண்­டா­வது விக்­கெட்டில் 355 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தி­ருந்தார்.

சீனுரன் முத்­து­சா­மி­யுடன் தென் ஆபி­ரிக்கா டெஸ்ட் குழாத்தில் விக்கெட் காப்­பாளர் ரூடி செக்கண்ட், அன்ரிக் நோட்ஜே ஆகி­யோரும் அறி­முக வீரர்­க­ளாக இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை, தென் ஆபி­ரிக்­காவின் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் குழாத்தில் டெம்பா பவுமா, அன்ரிச் நோட்ஜே, பிஜொன் போர்ட்டின் ஆகியோர் புது­முக வீரர்­க­ளாக இடம்­பெ­று­கின்­றனர்.

தென் ஆபி­ரிக்க இரு­பது 20 கிரிக்கெட் குழாத்தில் வழ­மை­யான அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் சேர்க்­கப்­ப­டா­ததால் அணித் தலை­வ­ராக குவின்டன் டி கொக் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எனினும் தென் ஆபி­ரிக்க டெஸ்ட் அணித் தலை­வ­ராக டு ப்ளெசிஸ் விளை­யா­ட­வுள்ளார்.

தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான 3 சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் செப்­டெம்பர் 15ஆம், 18ஆம், 22ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளன. இதனைத் தொடர்ந்து இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்­டோபர் 2 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

தென் ஆபி­ரிக்க டெஸ்ட் குழாம்: பவ் டு ப்ளெசிஸ் (அணித் தலைவர்), டெம்பா பவுமா (உதவி அணித் தலைவர்), தியூனிஸ் டி ப்ரன், குவின்டன் டி கொக், டீன் எல்கர், ஸுபைர் ஹம்சா, கேஷவ் மஹாராஜ், ஏய்டன் மார்க்ராம், சீனுரன் முத்­து­சாமி, லுங்கி நிகிடி, அன்ரிச் நோட்ஜே, வேர்னன் பிலேண்டர், டேன் பியெட், கெகிசோ ரபாடா, ரூடி செக்கண்ட்.

தென் ஆபி­ரிக்க சர்­வ­தேச இரு­பது 20 குழாம்: பவ் டு ப்ளெசிஸ் (அணித் தலை வர்), ரசி வென் டேர் டுசென் (உதவி அணித் தலைவர்), டெம்பா பவுமா, ஜூனியர் டேலா, பிஜொன் போர்ட்டின், போரன் ஹெண்ட்றிக்ஸ், ரீஸா ஹெண்ட் ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நோட்ஜே, அண்டைல் பெலுக்வாயோ, ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ், கெகிசொ ரபாடா, டெப்ரெய்ஸ் ஷம்சி, ஜொன் ஜொன் ஸ்மட்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!