வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 16 : 2012 -தென் ஆபிரிக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 34 பேர் சுட்டுக்கொலை
1513: கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர்; பிரெஞ்சுப் படைகளை வென்றார்.
1780: தென் கரோலினாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகளை வென்றன.
1819: இங்கிலாந்து, மன்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.

1865: 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் சுதந்திரம் பெற்றது.
1929: பிரிட்டனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த பலஸ்தீனத்தில் அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் வன்முறைகள் மூண்டன.
இம்மோதல்களால் இரு வாரகாலத்தில் 133 யூதர்கள், 116 அரேபியர்கள் உயிரிழந்தனர்.
1945: ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1946: இந்தியாவின் கொல்கத்தாவில் பாரிய வன்முறைகள் மூண்டன. இவ்வன்முறைகளால் 3 நாட்களில் சுமார் 4000 பேர் பலியாகினர்.
1945 : சீனாவின் கடைசி மன்னன் பூயி, சோவியத் படைகளினால் கைதானான்.
1960: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1960: அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் ஜோசப் கிட்டிங்கர் என்பவர் 31,300 மீற்றர் (102, 800 அடி) உயரத்திலிருந்து பரசூட் மூலம் குதித்தார். இதன் மூலம் அவர் படைத்த சாதனைகள் 2012 ஆம் ஆண்டு வரை முறியடிக்கப்படாமல் இருந்தன.
1962: இந்தியாவில் பிரான்ஸின் வசமிருந்த பிராந்தியங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு 8 ஆண்டுகளின் பின்னர் இம்மாற்றத்துக்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாக பரிமாறப்பட்டன.
1964: தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜனாதிபதி டோங் வான் மின் பதவியேற்றப்பட்டார்.
1972: மொரோக்கோ மன்னர் இரண்டாம் ஹசனை படுகொலைசெய்து ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்குடன் அவர் பயணம்செய்த விமானத்தின் மீது மொரோக்கோ விமானப்படை விமானமொன்று தாக்குதல் நடத்தியது.எனினும் அவ்விமானம் வீழ்த்தப்படவில்லை.
1987: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4 வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
2005: வெனிசுலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
2006: இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
2012: தென் ஆபிரிக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் 34 பேர் உயிரிழந்தனர்.
2013: பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலொன்றும் சரக்குக் கப்பலொன்றும் மோதியதால் 61 பேர் உயிரிழந்தனர்.
2015: சிரிய விமானப் படையின் வான் தாக்குதல்களில் சுமார் 96 பேர் உயிரிழந்தனர்.
2015: இந்தோனேஷியாவில் விமானமொன்று வீழ்ந்ததால் 54 பேர் உயிரிழந்தனர்.