நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 32

0 359

“கலாபூஷணம்” பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்

(சென்றவாரத் தொடர்ச்சி)
எந்த ஒரு பெண்­ணு­டயை விருப்­பத்­துக்கு மாறாக சரி, வாழ்க்­கை­யில ஒரே ஒரு தட­வை­யா­வது கணவன் மனை­வி­யாக நடந்து கொண்­டது உண்டா..? எனக் கேட் டாள், நிவேதா.
சுரேஷ்மௌனி­யாக விரைத்து நின்றான்.

இனி அதி­லி­ருந்து..

நிவே­தாவின் இந்த எதிர்­பா­ராத கேள்­வியை செவி­யுற்ற சுரேஷ் திடுக்­கிட்டுப் போனான்.ஒரே­ய­டி­யாக சுரேஷின் பார்வை நிவே­தாவின் கண்­களை ஏறிட்டு நோக்­கின. பின் நீதி­ப­தியை ஏறிட்டு நோக்­கின. அதன் பின் மீண்டும் நிவே­தாவை நோக்­கிய அவன் பார்வை தாழ்ந்­தது.

சுரேஷை நோக்­கிய நீதிபதி யெஸ்! சுரேஷ் என்றார். சுரேஷைப் பார்த்த நிவேதா ம் என்­ற­வாறு தனது கேள்­விக்கு பதிலைக் கேட்டாள்.  இல்ல என பதிலை மென்று விழுங்­கினான்.

பொய் சொல்ல வேண்டாம் மிஸ்டர் சுரேஷ்! நீங்கள் சுகந்­தியைத் தவிர வேறு ஒரு பெண்­ணுடன் கணவன் மனை­வி­யாக உறவு வைத்­தி­ருக்­கி­றீர்கள் என்­கிறேன் நான். தைரி­யத்தை வர வழைத்துக் கொண்ட சுரேஷ் அதெப்­படி உங்­க­ளுக்குத் தெரியும்? என நிவோ­தவை ஏறிட்டு நோக்­கி­ய­வாறே கேட்டான்.

அதற்கு சாட்சி என்­னிடம் உண்டு! என்று நிவேதா சொன்­னதும் சுரேஷ் தன்­னிடம் இருந்த தைரி­யத்தில் தளர்ந்து போனான். தைரி­ய­மாக சுரேஷை ஏறிட்டு நோக்­கிய நிவேதா அந்தப் பெண்­ணையும் எனக்குத் தெரியும் என்றாள், உறு­தி­யாக.

சரிந்து போன தனது தைரி­யத்தை மீண்டும் வர வழைத்துக் கொண்ட சுரேஷ், அந்தப் பெண்ணை உங்­களால் கோர்ட்­டுக்கு கொண்டு வர முடி­யுமா ? என நிவே­தாவை ஏறிட்டு நோக்­கிய வாறே கேட்டான், சுரேஷ்.
சுரேஷின் இந்தக் கேள்­வியைக் கேட்­டதும் சீறிய பாம்­பாக வெகுண்ட நிவேதா ஷுவர்! ஷுவர் !! நிச்­ச­ய­மாக !!!

அந்தப் பெண்ணை நிச்­ச­ய­மாக இந்த வழக்கில் உங்­க­ளுக்கு எதிராக் சாட்சி சொல்ல என்னால் இந்தக் கோர்ட்­டுக்கு கொண்டு வர முடியும் ! என சீறிப் பாய்ந்தாள்.  நீங்க சொல்­கிற அந்தப் பெண்­ணோட நான் எப்போ? எங்க? எந்த இடத்­துல..? எப்­படி நடந்துக் கிட்­டேன்னு உங்­க­ளால நிரூ­பிக்க முடி­யுமா..?

என, நிவே­தாவைப் பார்த்து தைரி­ய­மாகக் கேட்டான், சுரேஷ். நிச்­ச­ய­மாக நான் நிரூ­பிக்­கத்தான் போகிறேன். அதற்கு முன்னால் இப்­போது நீங்கள் என்­னிடம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு நான் பதில் சொல்­கிறேன். நீங்கள் உங்கள் மனை­விக்கு புறம்­பாக உறவு கொண்ட இன்­னொரு பெண் சம்­பந்­த­மாக அது எங்கே? எப்­படி என்று கேட்­டீர்கள்?

அது சுகந்தி கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு ஒரு நாளைக்கு முன்னால் நடந்­தது. நான் சுகந்­தியைக் கொலை செய்ய இல்ல. சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்கை அப்­ப­டித்தான் கூறு­கி­றது. நீங்கள் கொலை செய்­தீர்­களா ? இல்­லையா என்­பதை வழக்கு முடிவில் இந்த நீதி­மன்றம் முடிவு செய்யும். உங்கள் மனை­விக்கு புறம்­பாக உறவு கொண்ட இன்­னொரு பெண் சம்­பந்­த­மாக அது எங்கே ? எப்­படி ? என்று கேட்­டீர்கள் ?

நண்பர் ஒரு­வரின் திரு­மண வீட்டில் வைத்து சொப்ட் டிரிங்ஸில் ஹொட் டிரிங்ஸைக் கலந்து கொடுத்து அவளை மயக்­க­ம­டையச் செய்து கற்­ப­ழித்­தீர்கள். ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி உறவு கொண்டா, அது குற்றம்
இல்­லையே! என, புன்ன­கை­யுடன் நிவே­தாவைப் பார்த்துக் கேட்டான், சுரேஷ்.

அப்­ப­டி­யானால் நீங்கள் சுகந்­திக்கு புறம்­பாக இன்­னொரு பெண்­ணுடன் கணவன் மனை­வி­யாக நடந்­துள்­ளீர்கள் என்­பதை ஒப்புக் கொள்­கி­றீர்கள் ? அப்­ப­டித்­தானே எனக் கேட்டாள், நிவேதா.

நான் சட்­டத்தைச் சொன்னேன்!

நான் முன்னர் குறிப்­பிட்ட நீங்கள் கற்­ப­ழித்த பெண் உங்­களை விரும்பவில்லை. அதனால் நண்பரின் திருமண வீட்டில் வைத்து சொப்ட் டிரிங்ஸில் ஹொட் டிரிங்ஸைக் கலந்து கொடுத்து அவளை மயக்கமடையச் செய்து கற்பழித்தீர்கள். அது தானே உண்மை எனக் கேட்டாள், நிவேதா. சுரேஷ் மௌனியாக நின்றான்.

(அடுத்த வாரம் தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!