மீண்டும் வனிதா: சகுனியின் ஆடுகளமாக மாறுகிறது பிக்பொஸ் வீடு

0 1,706

-ஏ. எம். சாஜித் அஹமட்-

பிக்பொஸ் வீட்டின் உள்ளே எதிர்­பா­ராத பல திருப்­பங்கள் உரு­வா­கி­யுள்­ளன. அமை­திப்­பூங்­கா­வாக காட்­சி­ய­ளிக்க ஆரம்­பித்­தது பிக்பொஸ் வீடு. ஒரு­வ­ருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும், அன்­பினைப் பரி­மா­றியும், மிக கச்­சி­தா­மாக டாஸ்­கு­களை செய்து கொண்­டி­ருந்­தனர்.

இப்­ப­டியே பிக்பொஸ் பய­ணித்தால் பார்ப்­ப­வர்­க­ளுக்கு மித­மிஞ்­சிய அலுப்பு தட்­டி­விடும் என முடி­வெ­டுத்த கமல் வைல்ட்கார்ட் என்­ரி­யினை உள்ளே அனுப்­பி­வைத்தார். யாருக்கும் தெரி­யாமல் பரிசுப் பொதியின் உள்ளே கஸ்­தூரி இருந்தார்.

முதன் முதலில் இது வைல்ட்கார்ட் என்ரி என்­பதை தர்­ஷன்தான் யூகித்துக் கொண்டார். கஸ்­தூ­ரியை அனை­வரும் ஆர­வா­ரத்­துடன் வர­வேற்­றனர். வீட்­டினை முழு­வ­து­மாக சுற்றிக் காட்­டினர். சமைத்துக் கொடுத்­தனர்.அடுத்த வினா­டி­யி­லி­ருந்து கஸ்­தூரி அனை­வ­ரி­டமும் கேள்­வி­களை எழுப்பத் தொடங்­கினார். கவின், சாக்ஷி பற்றி கஸ்­தூரி எழுப்­பிய கேள்­விகள் பூகம்­பமாய் வெடிக்கத் தொடங்­கின.

கவி­னையும், லொஸ்­லி­யா­வையும் இணைத்து கஸ்­தூரி பேசும் போதெல்லாம் சா­க் ஷியின் முகம் சிவக்கத் தொடங்­கி­யது. சா­க்ஷியின் வெளியேற்­றத்­திற்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு பிக்பொஸ் வீடு மாற்றம் கண்­டது. கஸ்­தூ­ரியும் எதிர்­பார்த்த பிரச்­சி­னை­களை உரு­வாக்­க­வில்லை.

வனிதா

 

உடனே வனி­தாவின் வன­வாசம் முடித்த அடுத்த பிர­வேசம் பிக்பொஸ் வீட்டின் உள்ளே தொடங்­கி­வைக்­கப்­பட்­டது.  நாரதர் உள்ளே வந்தால் எவ்­வா­றெல்லாம் சரித்­திர பிரச்­சி­னைகள் தோற்றம் எடுக்­குமோ, அவ்­வாறே பிக்பொஸ் வீடும் கதி­க­லங்கிப் போனது. இரண்­டா­வது வாரத்தில் பிக்பொஸ் வீட்­டினை விட்டு வெளியே­றிய வனிதா திரும்­பவும் வருவார் என யாரும் எதிர்­பார்க்­க­வில்லை.

வனி­தாவும் சும்மா வர­வில்லை. பிக்பொஸ் வீட்டில் இருக்கும் அனை­வ­ரையும் ஒரு கை பார்ப்­ப­தற்­கா­கவே வந்­தி­ருக்­கிறார். வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைத்­த­தி­லி­ருந்து முரண்­பா­டு­களின் மூட்­டை­யா­கவே வனிதா மாறி­விட்டார்.

ஒவ்­வொ­ருத்­த­ராகச் சென்று அவர்கள் மீதான மக்­களின் அபிப்­பி­ரா­யத்­தினை சொல்­லாமல் சொல்­கிறார். வெளியே சென்ற நாட்­களில் பிக்பொஸ் வீட்டின் உள்ளே நடந்­த­வை­களை அவ­தா­னிப்­பாக பார்த்த வனிதா, உள்ளே வந்­ததும் ஒவ்­வொரு பிரச்­சி­னை­யாக தனித் தனியே நோண்ட ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

வனி­தாவின் பார்­வை­யி­லி­ருந்து தப்­பித்துக் கொள்ள ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு திசை நோக்கி ஓடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் இங்கு ஓடவும் முடி­யாது, ஔியவும் முடி­யாது என்­பதை அனை­வரும் அறிந்­தி­ருந்தும், சில நேரங்­களில் மறந்து விடு­கின்­றனர்.

அபி­ராமி, முகின் நல்ல நண்­பர்­க­ளாக இருந்­த­வர்கள். வனிதா வந்து தீயினை பற்­ற­வைக்க அவர்­க­ளுக்கு உள்ளே பெருத்த சண்டை நடந்து விட்­டது. இவ்­வா­ரத்தின் நோமி­னே­ஷனில் அபி­ராமி, லொஸ்­லியா, கவின், மது­மிதா தெரி­வா­கி­யுள்­ளனர்.

தர்ஷன், முகின்

 

பிக்பொஸ் வீட்டின் ஹோட்டல் டாஸ்கில் மிக நன்­றாக செய்­த­வராக­ மது­மிதா தெரி­வானார். இவ்­வாரம் பிக்பொஸ் வீட்டில், அதி­க­மான சட்­டங்­களை மீறி ஆங்­கிலம் கதைத்த குற்­றத்­திற்­காக கஸ்­தூ­ரியும், அபி­ரா­மியும் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இவர்­களை சிறையில் அடைத்­தது தவறு, இங்கு ஆண்கள் பெண்­களை அடி­மைப்­ப­டுத்­து­கி­றார்கள் எனும் குற்­றச்­சாட்­டினை பகி­ரங்­க­மாக முன்­வைத்தார் மது­மிதா. இதனால் மது­மி­தா­விற்கும் கவி­னுக்கும் இடையே பாரிய சண்டை நடந்­தது.

இதில் குறிப்­பி­டப்­பட வேண்­டிய விடயம் என்­ன­வென்றால் இப்­ப­டி­யான அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் மூல காரணம் வனி­தாதான். அவர்தான் மது­மி­தா­விடம் பிக்பொஸ் வீட்டில் ஆணா­திக்கம் நில­வு­கி­றது என பற்­ற­வைத்தார்.

இத­னையே நம்பிக் கொண்­டி­ருந்த மது­மிதா கவி­னுக்கு கார­சா­ர­மாக கதைக்க, கவினும் வழமை போல அழு­து ­விட்டார். மது­மி­தாவின் பேச்­சினை அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்த லொஸ்­லி­யாவும் வழ­மைக்கு மாறாக கோபப்­பட்டார்.

தூரத்­தி­லி­ருந்து வனிதா பேசு­வதை தனது மொழி­ந­டையில் சாண்டி டப்பிங் செய்ய, எல்லாக் கவ­லை­க­ளையும் மறந்து அனை­வரும் சிரித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். இச்­சி­ரிப்பு நீண்ட நேரங்கள் நீடிக்­காது என்­பதை மக்கள் நன்­க­றிவர்.

பிக்பொஸ் வீட்டின் தற்­போ­தைய ஆதர்ச நாயகன் தர்­ஷன்தான். அனை­வ­ருக்கும் தர்ஷன் மீது அதி­க­மான பாசமும், உண்­மை­யாக இருப்­பவன் எனும் அடை­யா­ளமும் தோன்­றி­யி­ருக்­கி­றது. அதற்கு தகுந்­தவர் போல தர்­ஷனும் தன்னை வடி­வ­மைக்­கிறார். தர்ஷன், ஷெரின் விட­யத்தில் பிரச்­சி­னை­கள் ­தோன்­று­வ­தற்­கான வாய்ப்­புகள் பெரி­தாக காணப்­ப­ட­வில்லை.

ஐம்­பது நாட்­களை கடந்து பிக்பொஸ் வீடு பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது. பலரும் வெளியேறி, வெளியே­றி­வர்கள் உள்ளே வந்­து­மி­ருக்­கின்­றனர். இன்னும் மிகுதி உள்ள நாட்­களில் கமல் பல திட்­டங்­களை தீட்­டுவார். வனி­தா­வினை மூல­த­ன­மாக வைத்து அனை­வ­ரி­னதும் உண்மை முகத்­தினை அடை­யாளம் காட்­டுவார்.

கஸ்தூரி

 

வனி­தாவும் அனை­வரும் நடிப்­ப­தா­கவே கூறி வரு­கிறார். இயல்­பாக கோபக் குணம் கொண்ட சேரன் பிக்பொஸ் வீட்­டினில் எவ்­வ­ளவு பிரச்­சி­னைகள் ஏற்­படும் போதும் அமை­தி­யாக இருக்­கிறார். ஆக, சேரன் இவ்­வீட்டில் நடித்துக் கொண்­டி­ருக்­கி­றாரா? எனும் சந்­தேகக் கேள்­வி­களை வனி­தாவே எழுப்­பினார்.

எல்­லோரும் போட்டி போட்டு விளை­யா­டு­வ­தற்­கா­கவே இங்கு வந்­துள்ளோம். இதில் விட்டுக் கொடுப்­புகள் இருப்­ப­தற்கு எவ்­வி­த­மான வாய்ப்பும் இல்லை என்­பதை ஆணித்­த­ர­மாக சொல்லிக் கொண்­டி­ருக்­கிறார் வனிதா. வனி­தா­வினை வைத்து பிக்பொஸ் வீட்டில் உள்ள அனை­வ­ரி­னதும் உண்மை முகத்­தினை வெளியே கொண்­டு­வ­ரு­வ­துதான் கமலின் ஒரே எண்ணம்.

இதற்­கா­கவே கஸ்­தூரி உள்ளே அனுப்பி வைக்­கப்­பட்டார். ஆனாலும் சரி­யாக அதனை கஸ்­தூரி செய்­தி­ருக்­க­வில்லை. மீண்டும் உள்ளே வந்த வனிதா சிறப்­பான, தர­மான சம்­ப­வங்­களை செய்து கொண்­டி­ருக்­கிறார்.

இதில் அனை­வரும் ஏதோ ஒரு அடிப்­ப­டையில் சிக்கிக் கொள்­வார்கள். இது­வரை சிக்­கா­ம­லி­ருப்­பது தர்ஷன் மாத்­தி­ரம்தான். இனி என்­ன­வெல்லாம் பிக்பொஸ் வீட்டின் உள்ளே நடக்கும் என்பதை வனிதாவின் வாய்தான் தீர் மானிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!