‘அணு ஆயுத போரை தூண்டுகிறார் பிரியங்கா சோப்ரா’ பாகிஸ்தான் யுவதி குற்றச்சாட்டு

ஐ.நா. நல்லெண்ணத் தூதுவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் கோரிக்கை

0 622

நடிகை பிரி­யங்கா சோப்ரா, இந்­திய பாகிஸ்தான் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான அணு­வா­யுதப் போரைத் தூண்­ட­லாமா என பாகிஸ்தான் யுவதி ஒருவர் கேள்வி எழுப்­பி­ய­துடன், இந்­திய இரா­ணு­வத்­துக்கும் நரேந்­திர மோடியின் அர­சாங்­கத்­துக்கும் ஆத­ர­வ­ளிக்கும் பிரி­யங்கா சோப்­ராவை ஐ.நாவின் யுனிசெவ் அமைப்பின் நல்­லெண்ணத் தூதுவர் பத­வி­யி­லி­ருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கோரி­யுள்ளார்.

பொலிவூட் மற்­றும ஹொலிவூட் சினிமா நட்­சத்­தி­ர­மாக விளங்கும் பிரி­யங்கா சோப்ரா, ஐக்­கிய நாடு­களின் நல்­லெண்ணத் தூது­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டவர்.

பாகிஸ்­தானின் பால்கோட் பகு­தியில் பயங்­க­ர­வா­தி­களின் முகாமை இந்­திய போர் விமா­னங்கள் அழித்­த­தாக அறி­விக்­கப்­பட்ட நிலையில், அதற்கு வாழ்த்துத் தெரி­விக்கும் வகையில் கடந்த பிப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி தனது டுவிட்டர் பக்­கத்தில் ஜெய் ஹிந்த் என பகிர்ந்­தி­ருந்தார்.

இந்­நி­லையில், அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் பிரி­யங்கா சோப்ரா கலந்­து­கொண்டார். 

இந்­நி­கழ்வின் கேள்வி பதில் நேரத்தில் பார்­வை­யா­ளர்கள் வரி­சை­யி­லி­ருந்து, தன்னை பாகிஸ்­தானைச் சேர்ந்த ஆயிஷா மாலிக் என அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்ட யுவதி ஒருவர்,

ஐ.நா.வின் நல்­லெண்ண தூத­ராக இருக்கும் நீங்கள், பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக அணு ஆயுத போரை தூண்­ட­லாமா? என பிரி­யங்­காவின் டுவிட்டர் பதிவை சுட்­டிக்­காட்டி கேள்வி எழுப்­பினார்.

என்னைப் போன்ற மில்­லியன் கணக்­கான பாகிஸ்­தா­னி­யர்கள் உங்கள் பொலிவூட் பிஸ்­ன­ஸுக்கு ஆத­ர­வ­ளிக்­கிறோம் எனவும் அவர் கூறினார்.

இக்­கேள்­விக்கு பதி­ல­ளித்த பிரி­யங்கா சோப்ரா, தான் போரை தூண்­டக்­கூ­டி­யவர் இல்லை எனவும், ஆனால் தான் ஒரு நாட்­டுப்­பற்­றாளர் எனவும் கூறினார்.

மேலும் பாகிஸ்­தானில் என்னை நேசிக்கும் நண்­பர்­களின் மனம் காயப்­பட்­டி­ருந்தால் வருந்­து­கிறேன் எனவும் கூறினார்.

இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடியோ சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் பாகிஸ்­தானின் மனித உரிமை விவ­கார அமைச்­ச­ரான ஷ்ரன் மஸாரி கடந்த திங்­கட்­கி­ழமை டுவிட்­டரில் வெளியிட்ட பதி­வொன்றில், பிரி­யங்கா சோப்ரா, இந்­திய இரா­ணு­வத்­துக்கும், கடு­மை­யான மோடி அர­சாங்­கத்­துக்கும் ஆத­ர­வ­ளிப்­பதால் தனது நல்­லெண்ணத் தூதுவர் பத­வி­யி­லி­ருந்து பிரி­யங்கா சோப்­ராவை யுனிசெவ் நீக்க வேண்டும் எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!