பறவை மோதியதால் விமானம் சோள வயலில் இறங்கியது; 233 பேரும் உயிர்த்தப்பினர் , விமானிக்குப் புகழாரம் ((வீடியோ))

Russian Passenger Plane Makes Emergency Landing In Cornfield

0 1,294

 

233 பேருடன் பறந்துகொண்டிருந்த பயணிளக் விமானமொன்றில் பறவைகள் மோதியதால் அவ்விமானம் அவசரமாக சோள வயல் ஒன்றில் தரையிறக்கப்பட்ட சம்பவம் ரஷ்hயவில்   நேற்று இடம்பெற்றது.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள  ஸுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து கிரைமியாவில் உள்ள சிம்பெரோபோல் நகருக்கு நேற்று வியாழக்கிழமை இவ்விமானம் புறப்பட்டது.

யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் ‘ஏ321’ ரகத்தைச் சேர்ந்த இவ்விமானத்தில் 226 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று விமானம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் இரண்டு என்ஜின்களும் பழுதடைந்தது.

உடனடியாக விமான ஊழியர்கள் விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று கூறினர். இதனால் அவ்விமானத்தை மொஸ்கோ விமான நிலையத்துக்கு வெளியிலுள்ள சோள வயல் ஒன்றில் விமான அவசரமாக அவசரமாக தரையிறக்கினார்.

அதையடுத்து விமானத்திலிருந்து சோள வயலில் பயணிகளும் ஊழியர்களும் இறங்கினர்.

இவ்விமானத்தை தரையிறக்கும்போது 9 சிறுர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர்.

அத்துடன் 55 பேருக்கு மருத்து சிகிச்சைகள் தேவைப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விமானத்தை  சோள வயலில் வெற்றிகரமாக தரையிறக்கிய 41 வயதான ரஷ்ய விமானி யேகெத்தரின் பேர்க்கை ஒரு ஹீரோ  என பலரும் புகழ்ந்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி விமானம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அது மீண்டும் பறக்க முடியாது எனவும்  யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!