225 எம்பிக்களையும் தியவன்னா ஓயாவில் தள்ளிவிட வேண்டுமென சிலர் கூறுகின்றனர்! -பிரதமர் ரணில்

0 1,167

                                                                                                                                        (நா.தனுஜா)
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் தியவன்னா ஓயாவுக்குள் தள்ளிவிட்டு, புதிதாக 225 பேரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள். மேலும் சிலர் நாட்டின் தேசிய கொள்கை மற்றும் வழிமுறைகளிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். நானும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன். ஆனால் அந்த மாற்றம் நபர்களிலன்றி, நாட்டின் தேசிய கொள்கையிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய இளைஞர் தொண்டர் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (17) அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:இளைஞர்கள் மீது காணப்பட்ட நம்பிக்கை நலிவடைந்திருந்த நிலையிலேயே நாடளாவிய ரீதியில் இயங்கிவந்த இளைஞர் அமைப்புக்களை ஒன்றிணைத்து இளைஞர் சேவைகள் சங்கம் அமைக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றார்கள். ஆனால் நான் அதற்கு எதிரான கருத்தையே கொண்டிருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் கருத்துக்களை நாம் செவிமடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!