சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு: பொலிஸார் விசாரணை, இராணுவம் சோதனை!

0 673

                                                                                                         (பாறூக் சிஹான்)
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (16) மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய தியேட்டருக்கு அருகாமையில் காணி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸாரினால் இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டது.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தினரும் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!