பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி இந்திய யுவதி சமியாவை மணமுடித்தார்

0 257

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, இந்­திய யுவதி சமியா அர்­சூவை துபாயில் செவ்­வா­யன்று நடை­பெற்ற பாரம்­ப­ரிய சம்­பி­ர­தா­யங்­க­ளு­ட­னான வைப­வத்தில் திரு­மணம் செய்­து­கொண்டார்.

அட்­லான்டிஸ் பாம்ஸ் ஹோட்­டலில் நடை­பெற்ற இந்தத் திரு­மண வைபவத்தில் குடும்ப அங்­கத்­த­வர்­களும் நெருங்­கிய நண்­பர்­களும் கலந்து சிறப்­பித்­தனர். 25 வய­தான ஹசன் அலி, 9 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் 51 ஒருநாள் சர்­வ­தேச போட்­டி­க­ளிலும், 30 சர்­வ­தேச இரு­பது20 போட்­டி­க­ளிலும் பங்­கு­பற்­றி­யுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்­க­ளான ஸஹீர் அபாஸ், மொஷின் கான் (பொலிவுட் நடிகை ரீனா ரோயு­டன் சிறி­து­கால மண­வாழ்க்கை), ஷொயெப் மாலிக் (சானியா மிர்ஸா) ஆகி­யோரைத் தொடர்ந்து இந்­திய பெண்ணை மண­மு­டித்த நான்­கா­வது கிரிக்கெட் வீரர் ஹசன் அலி ஆவார்.

இந்தத் திரு­மண வைப­வத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் கிரிக்கெட் அணி உறுப்பினர்களும் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியரை வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!