காதலில் நேர்மை மிக முக்கியம் -அக் ஷரா

0 62

காதலில் நேர்மைதான் ரொம்ப முக்கியம் என நடிகை அக் ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.  நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான நடிகை அக் ஷரா ஹாசன்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நடிகர் அஜித்துடன் ‘விவேகம்’ படத்தி­லும் நடித்திருந்தார் அக் ஷரா.

‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அக் ஷரா, விக்ர­முடன் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் அக்ஷராவின் நடிப்பு பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் விஷ்ணு­வர்தன் தயாரிக்கும் ‘ஃபிங்கர்டிப்’ என்ற வெப் சீரிசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்‌‌ஷரா ஹாசன்.

சமூக வலைதளங்களை வைத்து திரில்லர் ஸ்டோரியாக உருவாக்கப்பட்டுள்ளது ‘ஃபிங்கர்டிப்’.

இந்த வெப் சீரிஸ் எ­திர்­வரும் 25ஆம் திகதிக்குள் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அக் ஷரா ஹாசனிடம் காதலில் எது முக்கியம்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அக் ஷரா காதலில் நேர்மை மிக முக்கியம் என்று பதிலளித்தார்.

மேலும் சமூகவலைதளங்கள் மற்றும் மொபைலிடம் இருந்து சற்று விலகி இருங்கள் என்று கூறிய அக் ஷரா சக மனிதர்களிடம் பேசுங்கள் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!