திருப்­பங்­களை தேடும் பிக்பொஸ் வீட்டில் கமலின் ஆட்டம் ஆரம்பம்

0 1,221

–  ஏ.எம். சாஜித் அஹமட் –

பிக்பொஸ் வீட்­டி­லி­ருந்து தற்­கொலை முயற்­சியில் ஈடு­பட்­ட­ தாக கூறி மது­மிதா வெளி­யேற்­றப்­பட்டார். வீட்டின் தலை­வ­ராக இருந்த மது­மி­தாவின் வெளி­யேற்றம் பிக்பொஸ் வீட்டின் புதிய விதி­மு­றை­யாக மாறி­விட்­டது.

மது­மிதா வெளியே சென்­றாலும் இவ்­வா­ரத்­திற்­கான வெளி­யேற்றம் தங்கு தடை­யின்றி நடக்கும் என கமல் கூறி­விட்டார்.

வீட்டின் உள்ளே பல்­வே­று­பட்ட பிரச்­சி­னைகள் நடந்தும், எல்­லோரும் இவ்­வாரம் முகின் வெளி­யே­றுவார் என்றே நினைத்­தார்கள்.

ஆனால் அபி­ரா­மிதான் வெளி­யே­றினார். கமலின் மேடைக்கு அபி­ராமி வந்­ததும் சிறப்­பாக கதைக்க தொடங்­கி­விட்டார்.

சந்­தோ­ஷ­மாக கதைக்கும் அபி­ரா­மி­யினைப் பார்த்து பிக்பொஸ் வீட்டின் உள்ளே தொடர்ந்து அழுது புலம்­பி­னீர்கள், இங்கு அந்த அபி­ரா­மி­யினை காண­வில்­லையே என கேட்க, இதுதான் உண்­மை­யான அபி­ராமி பிக்பொஸ் வீட்டில் உள்ள பிரச்­சி­னைகள் என்னை சிரிக்க வைக்­க­வில்லை என்றார். இதி­லி­ருந்து பிக்பொஸ் வீட்டின் உள்ளே நடக்கும் கெடு­பி­டி­களை நாம் புரிந்து கொள்­ளலாம்.

வனி­தாவின் வரு­கைக்குப் பிறகு பிக்பொஸ் வீட்டில் யாருமே நிம்­ம­தி­யாக இல்லை. வனிதா கதைக்கும் போது பார்­வை­யா­ளர்கள் கூக்­கு­ர­லி­டு­கின்­றனர்.

வனிதா கதைப்­ப­தினை கேட்­ப­தற்கு யாரும் தயா­ராக இல்லை. மக்கள் தன்­மீது கடுப்­பாக இருக்­கி­றார்கள் என வனி­தா­விற்கு நன்கு புரிந்து விட்­டது, ஆனாலும் அவர் விடாப்­பி­டி­யாக பிக்பொஸ் வீட்டின் வத்­திக்­குச்­சி­யாக மாறி அனை­வ­ரி­னையும் பற்ற வைத்துக் கொண்­டி­ருக்­கிறார்.

பிக்பொஸ் வீட்டில் நடந்த ஆணா­திக்க முரண்­பாட்­டினை ஒரு மாதி­ரி­யாக கமல் தீர்த்து வைத்­து­விட்டார். சேரப்பா என செல்­ல­மாக சேரனை அழைத்து அப்பா, மகள் உற­வினைக் கொண்­டா­டிய லொஸ்­லி­யா­விற்கும் சேர­னுக்­கு­மான விரிசல் இவ்­வா­ரத்­துடன் முடிந்து விட்­டது. அத­னையும் கமல்தான் முடித்து வைத்தார்.

இத்­தனை பிணக்­கு­க­ளையும் கமல் முடித்து வைத்­தற்கு பிர­தான காரணம் பிக்பொஸ் வீடு அமை­தி­யாக இருக்க வேண்டும் என்­ப­தற்­கல்ல: புதிய சிக்­க­லினை பிக்பொஸ் வீட்டில் உரு­வாக்­கு­வ­தற்­கா­க­வே­யாகும். கமல் நினைத்­தது போல அடுத்த பிரச்­சினை அந்த வினா­டி­யிலே தோற்றம் பெற்று விட்­டது.

இவ்­வாரம் பாட­சாலை காலத்­தினை நினை­வு­ப­டுத்தும் வித­மாக அனை­வ­ருக்கும் டாஸ்க்­குகள் வழங்­கப்­பட்­டன. வனி­தாவுக்கும், கஸ்­தூ­ரிக்கும் தொட­ரான மோதல் நடந்து கொண்­டி­ருக்­கி­ன்றன. வனி­தா­வினைப் பார்த்து குண்­டாக இருப்­ப­தாக கஸ்­தூரி கூற, நான் மூன்று குழந்­தை­க­ளுக்கு தாய் எனும்­ப­டி­யாக விவாதம் தொடங்­கு­கி­றது.

ஆண்கள் அனை­வரும் ஒரு­பக்­க­மி­ருக்க, பெண்­கள்தான் சண்டை பிடித்துக் கொள்­கி­றார்கள். இன்னும் சொற்ப நாட்­களே உள்ள நிலையில் யார் பிக்பொஸ் டைட்­டிலை வெற்றி கொள்­வார்கள் என்­பது புரி­யாத புதி­ரா­கவே இருக்­கி­றது.

தர்ஷன் மிக நன்­றாக முன்­னே­றி­யி­ருக்­கிறார். எல்லா டாஸ்க்­கு­க­ளையும் கச்­சி­த­மாகச் செய்­கிறார். வனி­தாவை எதிர்த்து முதல் குரல் உயர்த்­தி­யதால் தர்ஷன் மீதான நம்­பிக்கை அனை­வ­ரையும் ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கி­றது. வெற்றிக் கனி­யினை எட்டிப் பறிக்கக் கூடிய மனோ தைரியம் தர்­ஷ­னுக்கு வந்­தி­ருப்­ப­தாக அனை­வரும் நம்­பு­கி­றார்கள்.

லொஸ்­லி­யாவும், கவினும் ஒரு இடத்தில் நீண்ட நேரம் பேசிக்­கொண்­டி­ருக்கும் போது, இவ்­வாறு இரவு நேரங்­களில் பேச வேண்­டா­மென சாண்டி சொல்­லவும், லொஸ்­லியா எழுந்து சென்று விட்டார்.  அபி­ரா­மியின் வெளி­யேற்­றமும் பிக்பொஸ் வீட்­டினை பெரி­தான சோகத்தில் ஆழ்த்­த­வில்லை.

அனை­வரும் விளை­யாட்டு மனப்­பாங்­கில்தான் பிக்பொஸ் வீட்டில் இருக்­கி­றார்கள். சேரன் மீதான முரண்­பாட்டில் லொஸ்­லியா சேரனை நோமினேட் செய்து விட்டு கவி­னிடம் இதனை கூறி அழு­து­வி­டுவார். அன்பின் பறி­மாற்­ற­மா­கவும், முரண்­பா­டு­களின் மூட்­டை­யா­கவும் பிக்பொஸ் வீடு பலதும் கலந்த கல­வை­யா­க­வி­ருக்­கி­றது.

இன்னும் நாட்கள் நெருங்கிக் கொண்­டி­ருப்­பதால் கமல் தனது விளை­யாட்­டினை மிக வேக­மாக ஆரம்­பிப்பார். பிக்பொஸ் வீட்டில் உள்­ள­வர்­க­ளுக்கு கடி­ன­மான டாஸ்க்­குகள் ஏதும் இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை. அனைத்து டாஸ்க்கு­க­ளையும் அய­ராது செய்யக் கூடி­ய­வர்­க­ளாக பிக்பொஸ் வீட்டில் இருப்­ப­வர்கள் மாறி­யி­ருக்­கி­றார்கள்.

இதுவே கம­லுக்கு பெருத்த சவா­லாக இருக்கப் போகி­றது. டாஸ்க்­குகள் மூலம் பிரச்­சி­னை­களை உரு­வாக்க இய­லா­விட்டால், கமல் வேறு வழி­களைப் பற்றி சிந்­திக்க வேண்டும்.  இனி­வரும் நாட்­களில் பிக்பொஸ் வீட்டில் போட்­டித்­தன்­மை­யான சூழல் நிலவும், பிக்பொஸ் வீட்­டினை விட்டு வெளி­யேறக் கூடாது என அனை­வரும் நினைப்­பார்கள். இவ்­வா­ரத்­திற்­கான நோமி­னே­ஷனில் கஸ்­தூரி, சேரன், சாண்டி, தர்ஷன் என முக்­கி­ய­மா­ன­வர்­களின் பட்­டியல் உள்­ளது. சாண்­டியும், தர்­ஷனும், சேரனும் காப்­பாற்­றப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. கஸ்­தூரி வெளி­யே­று­வ­தற்­கான வாய்ப்­பு­களும் உண்டு.

வனிதா புதி­தாக மீண்டும் வீட்­டிற்குள் வந்­ததால் அவரை யாரும் நோமி­னேஷன் செய்­வ­தற்கு இவ்­வாரம் வாய்ப்­ப­ளிக்­கப்­பட மாட்­டாது என பிக்பொஸ் கூறி­விட்டார். ஆனால் எப்­பொ­ழுதும், எதுவும் நடக்­கலாம் எனும் கமலின் வார்த்­தைகள் அனை­வ­ரையும் திக்­கு­முக்­காட வைக்­கின்­றன.

பிக்பொஸ் வீட்டின் சுவா­ரஷ்யம் குறை­வ­தற்கு கமல் இட­ம­ளிக்­க­மாட்டார். வத்­திக்­குச்­சி­யினைக் கொண்டு முழு­வ­து­மாக பற்ற வைப்பார். எல்லாப் பிரச்சினைகளையும் அலசி ஆராய்வார்.  யார் நல்­ல­வர்கள், யார் கெட்­ட­வர்கள் என்­பதை மக்கள் தீர்­மா­னிக்கும் கள­மாக பிக்பொஸ் வீடு அமைந்­தி­ருக்­கி­றது.

மக்­களின் தீர்­மானம் இறுதித் தீர்­மா­ன­மாக அமையப் போகி­றது. இத்­தீர்­மா­னங்கள் மக்கள் மன­தி­லி­ருந்தும், வாக்­கி­லி­ருந்தும் வெளிப்­ப­டை­யாக வரும்­வ­ரைக்கும் பிக்பொஸ் வீட்டின் உள்ளே கமல் பெரும் கல­கத்­தினை ஏற்­ப­டுத்­துவார். கலகம் கலக்­க­லாக இருக்­குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!