மகிழ்ச்சித் துளிகள் (-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்)

0 974

-கிஷோகர் ஸ்டனிஸ்லஸ்

சிட்­னியின் நேரம் மதியம் பனி­ரெண்டை நெருங்கி­யி­ருந்­தது. மதிய உண­வுக்­கான நேரம் இன்­னமும் அரை மணி­நே­ரத்தில் என்­ப­தனால் எங்­க­ளுக்குள் மதிய உணவு பற்றி பேச்­சி­ழுத்தோம். தென் கொரி­ய­னான ஜங்­கூனை தவிர எங்கள் அத்­தனை பேரி­டமும் மதிய உணவு இருந்­தது.

அவன் வழ­மை­யாக மதிய உணவு கொண்டு வரு­பவன். அன்­றைக்கு என்ன ஆன­தென்று தெரி­ய­வில்லை. கேட்­டாலும் சொல்ல மாட்டான். ஏதேனும் கேள்வி கேட்டால் சிறுத்த அவன் கண்­களை இன்னும் குறுக்கி ஒரு சிரிப்பு மட்டும் சிரிப்பான்.

அவ­னுக்கு ஆங்­கிலம் அதிகம் பேச­வா­ராது என்­பதை விட , சக மனி­தர்­க­ளு­ட­னான தொடர்­பா­டலில் அவனை பின்­னுக்கு இழுப்­பது அவ­னது கூச்ச சுபா­வமும் தனிமை உணர்­வுமே என்­பதைக் வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச நாட்­களில் கண்­டு­பி­டித்தேன்.

அதிகம் பேச­மாட்டான். அல்­லது பேசவே மாட்டான். மொழியும் கலா­சா­ரமும் முற்­றிலும் வேறாய் இருக்­கிற ஒரு தேசத்தில் கைவி­டப்­பட்­டி­ருக்­கிறேன் என்ற அவ­னது சுய இரக்கம் சப்­பை­யான அவன் முகத்தில் தெரியும். மிகவும் தனிமை உணர்­வினால் கஷ்­டப்­ப­டு­கிறான். அவ­னுக்கு இந்த நாடே பெரும் புதிராய் இருக்­கி­றது என்று சொன்னான் மற்ருஸ். மற்ருஸ் ஸ்லோவாக்­கியன்.

வழக்­கத்தை விடவும் மிகவும் மனச்­சோர்வாய் இருந்தான் ஜங்கூன். மதிய உணவு வேறு கொண்­டு­வ­ர­வில்லை.
என்­னிடம் சாண்ட்விச் இருந்­தது. இரண்டு பெரிய துண்­டுகள். கூடவே கொஞ்சம் புரூட் சலட்டும் வைத்­தி­ருந்தேன்.
” ஜங்கூன் நான் உனக்கு ஒரு சாண்ட்விச் துண்டை தரு­கிறேன். சேர்ந்து சாப்­பி­டலாம் என்றேன் ” .

” இல்லை வேண்டாம். நான் ஊபர் ஈட்ஸில் ஓர்டர் செய்­கிறேன். ஆனாலும் உனக்கு நன்றி ” என்றான்.
அதற்கு மேல் அவனை வற்­பு­றுத்­து­வது நாக­ரீ­கமாய் பட­வில்லை. தவிர , அவன் பசியை விட மிகுந்த மனச்­சோர்வாய் இருந்தான் . அவனை சற்­று­நேரம் அவன் பாட்­டுக்கு விடு­வதே சரி என்று பேசாமல் விட்டேன்.

ஊபர் ஈட்­ஸி­லி­ருந்து அவ­னுக்கு அழைப்பு வந்­தது. அவன் ஓர்டர் செய்­தி­ருந்த சப்வே சப்­மெ­ரீனை வைத்­துக்­கொண்டு டெலி­வரி ஆள் இவ­னுக்கு அழைப்­பெ­டுத்­தி­ருந்தான். இவன் கீழே இறங்கிப் போனான்.சற்­றைக்கும் முக­மெல்லாம் சிரிப்பாய் இருக்க , மிகுந்த குதூ­க­லத்­தோடு வரும் ஜங்­கூனைக் கண்டேன். அவன் அவ­ளவு சந்­தோ­சமாய் இருந்து நான் கண்­ட­தில்லை.

அந்த உணவுப் பொட்­ட­லத்தைப் பார்த்து பார்த்து சிரித்தான். அவன் முகத்தில் ஆறு­தலும் , பாது­காப்பு உணர்வும் நம்­பிக்­கையும் இருக்­கு­மாப்போல் இருந்­தது. அந்தச் சிரிப்பு நிறை­வுக்­கான , பூர­ணத்­துக்­கான சிரிப்பு. நகைச்­சு­வைக்கு சிரிப்­ப­தற்கும் , மன­நி­றைவில் சிரிப்­ப­தற்கும் பெரிய வித்­தி­யாசம் உண்டு. இல­குவில் அந்த வித்­தி­யா­சத்தைக் கண்டும் பிடிக்­கலாம்.

ஜங்கூன் மன­நி­றைவாய் இருந்தான். அந்த உணவுப் பொதியை மேசையில் வைத்­து­விட்டு இடுப்பில் கை கொடுத்­த­படி அதைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தான். எனக்கு ஆச்­ச­ரியம் தாள­வில்லை. எழும்பி அவ­னுக்கு அருகில் போனேன்.

” ஏன் சந்­தோ­சமாய் இருக்­கிறாய்?” – இந்தக் கேள்­வியே படு மோட்­டுத்­த­ன­மான சாடி­ச­மான கேள்­விதான் என்­றாலும் அப்­ப­டித்தான் அந்தச் சந்­தர்ப்­பத்தில் , ஜங்கூன் போன்ற ஒரு சுபா­வி­யிடம் கேட்க முடியும். என் நாக­ரீ­க­மற்ற கேள்­விக்காய் மன்­னித்துக் கொள்­ளுங்கள்.

” இந்த உணவுப் பொதியில் என் பெயரை எழு­தி­யி­ருக்­கி­றார்கள் ” என்றான்.” இதென்ன பெரிய விசயம்? ஊபர் ஈட்ஸில் உணவு ஓர்டர் செய்­த­வ­ரு­டைய பெயர் உணவுப் பொதியில் எழு­தப்­பட்­டி­ருப்­பது வழமை தானே ” என்றேன்.

” இல்லை.. என் பெயரை கொரி­யனில் எழு­தி­யி­ருக்­கி­றார்கள்”

திரும்ப உற்றுக் கவ­னித்தேன். ஜங்கூன் என்று அவ­னது பெயர் ஆங்­கி­லத்தில் எழு­தப்­பட்­டி­ருந்­தது. அதற்கு முன்னால் பேனா எழு­து­கி­றதா என்று கிறுக்கிப் பார்த்­தி­ருக்­கி­றார்கள் என்று நான் முன்பு நினைத்­தது தவறு. அது கொரியன் எழுத்­துக்கள்.

” எப்­படிச் சாத்­தியம் ?” என்றேன்.

” எனது பெயர் ” என்றான்.

நான் புரி­யாமல் பார்த்தேன்.

” நான் உணவு ஓர்டர் செய்த இடத்தில் யாரோ கொரியன் இருந்­தி­ருக்­கிறான். அவன் எனது பெயரை வைத்து நான் கொரியன் என்று அடை­யாளம் கண்டு , எனது பெயரை கொரி­ய­னிலும் எழு­தி­யி­ருக்­கிறான் “. மலர்ந்து சிரித்தான்.

அந்த தொடர்­நி­கழ்ச்­சிகள் அத்­த­னையும் ஒரு பீல் குட் சினி­மாவை பார்த்­தது போல் நிறைவாய் இருந்­தது.
தனது மொழியைப் பேசாத , தனது கலா­சா­ரத்­துக்கு கொஞ்­சமும் தொடர்­பில்­லாத ஒரு தேசத்தில் தனி­மையில் உழலும் ஒரு­வ­னுக்கு, கண்­ணுக்கு தெரி­யாத அவ­னது சக தேசத்­தவன் அவன் பெயரை வைத்து அவனை அடை­யாளம் கண்டு அவன் மொழியில் அவன் பெயரை எழு­தி­யி­ருந்­தது அவனை மிகவும் நெகிழ வைத்­து­விட்­டி­ருந்­தது.

யோசித்துப் பாருங்கள். ஆபி­ரிக்க நாடொன்றில் இருக்­கி­றீர்கள். தமிழ் பேசும் யாரும் கூட இல்லை.தனிமை உணர்வு போட்டு பிடித்து ஆட்­டு­கி­றது. அந்த நாட்டின் மொழி ஏதோ அரை­கு­றையாய் தெரியும்.

அங்கே உணவு ஓர்டர் செய்­கி­றீர்கள் . ஓர்டர் செய்­கிற இடத்தில் வேலை செய்­கிற ஒரு தமிழன் உங்கள் பெயரை வைத்து நீங்கள் தமிழர் என்று கண்டு , உங்கள் பெயரை தமிழில் எழுதி அனுப்­பு­கிறான். எவ­ளவு சந்­தோ­சமாய் இருக்கும்?

என்னை மிகவும் ஈர்த்­தது ஜங்­கூனின் பெயரை கொரி­யனில் எழு­திய யாரென்றே தெரி­யாத அந்தக் கொரியன் ஆள் தான். ஜங்­கூனின் பெயரை கொரி­யனில் எழுத அவ­னுக்கு சில செக்­கன்கள் தான் ஆகி­யி­ருக்கும். ஆனால் ஒரு நாள் முழு­வதும் ஒரு­வனை உயிர்ப்­போடு , நம்­பிக்­கை­யோடு வைத்­தி­ருக்க கூடிய காரியம் அது.

வரு­கிற ஆயி­ரக்­க­ணக்­கான ஓர்­டர்­களில் ஒன்­றாக அதையும் கணக்­கெ­டுத்து , ஆங்­கில தேச­மொன்றின் தாய்­மொ­ழியில் ஜங்­கூனின் பெயரை எழு­தி­விட்டு அவன் கடந்து போயி­ருக்­கலாம். அது தான் அவன் வேலையும். ஆனால் தனது சின்ன ஒரு முயற்சி இன்­னொரு மனிதனின் முகத்தை மலரவைக்கும் என்பதற்காய் கொஞ்சம் மினக்கெடுகிற மனது இருக்கிறதே…

அந்த அன்பினால் இயங்குகிறது உலகு. அந்த மனிதர்களினால் ஆனது உலகு. நம்மைச் சுற்றி ஆயிரம் ஜங்கூன்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களிடம் சற்று அன்பாக நடந்துகொள்வதே.

காரணம், நாம் அற்பம் என்று நினைக்கிற நிறைய விசயங்கள் இன்னொரு மனிதனுக்கு பெருத்த சந்தோசத்தைக் கொடுக்கின்றன.

B04-B13.indd

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!