வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 23: 2011- லிபி­யாவில் கேணல் கடா­பியின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டது

0 433

1305: ஸ்கொட்­லாந்தின் நாட்­டுப்­பற்­றாளர் வில்­லியம் வொலஸ், இங்­கி­லாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்­னனால் நாட்­டுத்­து­ரோகத்­துக்­காகக் குற்றம் சாட்­டப்­பட்டு தூக்­கி­லி­டப்­பட்டார்.

1541: பிரெஞ்சு நாடுகாண் பய­ணி­யான ஜாக் கார்ட்­டியேர் கன­டாவின் கியூபெக் நகரை அடைந்தார்.

1784: மேற்கு வட கரோ­லினா (தற்­போது கிழக்கு டென்­னசி) பிராங்­கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறி­வித்­தது. இது ஐக்­கிய அமெ­ரிக்­காவால் ஏற்­கப்­ப­ட­வில்லை.

2011: லிபி­யாவில் கேணல் கடா­பியின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டது

1821: ஸ்பெயி­னிடம் இருந்து மெக்­ஸிகோ சுதந்­திரம் பெற்­றது.

1839: சீனாவின் கிங் சீனர்­க­ளுடன் போரி­டு­வ­தற்­காக ஹொங்­கொங்கை பிரிட்டன் கைப்­பற்­றி­யது.

1914: முதலாம் உலகப் போரில் ஜேர்­ம­னிக்கு எதி­ராக ஜப்பான் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

(2 ஆம் உலக யுத்­தத்தில் இவ்­விரு நாடு­களும் ஒரே அணி­யாக இணைந்­தன)

1939: ஜேர்­ம­னியும் சோவியத் ஒன்­றி­யமும் போர் தவிர்ப்பு ஒப்­பந்­தத்தில் கைச்­சா­திட்­டனர்.

பின்­லாந்து, உக்ரைன், போலந்து ஆகி­ய­வற்றை தமக்­கி­டையே பகிர்­வது என்றும் இர­க­சிய முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

1940: இரண்டாம் உலகப் போரில் லண்டன் மீது ஜேர்மன் குண்டு வீச்சை ஆரம்­பித்­தது.

1944: அமெ­ரிக்­காவின் போர் விமானம் ஒன்று இங்­கி­லாந்தில் பாட­சாலை ஒன்றின் மேல் வீழ்ந்­ததில் 61 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1948: ஏ. கே. செட்­டியார் தயா­ரித்த காந்தி பற்­றிய முதல் வர­லாற்றுத் திரைப்­படம் தமி­ழிலும் தெலுங்­கிலும் வெளி­யி­டப்­பட்­டது.

1952: அரபு லீக் அமைக்­கப்­பட்­டது.

1966: லூனார் ஆர்­பிட்டர் 1 முதன் முத­லாக சந்­தி­ரனின் சுற்­று­வட்­டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்­களை அனுப்­பி­யது.

1973: இண்­டெல்சாற் தொலைத்­தொ­டர்பு செய்­மதி ஏவப்­பட்­டது.

1975: லாவோஸில் கம்­யூ­னிஸப் புரட்சி நடைபெற்றது.

1990: ஆர்­மே­னியா சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்து பிரி­வ­தாக சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

1990: மேற்கு ஜேர்­ம­னியும் கிழக்கு ஜெர்­ம­னியும் அவ்­வ­ருடம் ஒக்­டோபர் 3 ஆம் திகதி ஒன்­றி­ணை­ய­வி­ருப்­ப­தாக அறி­வித்­தன.

2000: பஹ்­ரேய்னில் கல்வ் எயார் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 143 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2011: லிபி­யாவில் தேசிய இடைக்­கால பேர­வையின் படை­களால் கேணல் கடா­பியின் ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!