ஜமாத்தே மில்லதே இப்ராஹீமின் 16 உறுப்பினர்கள் அம்பாறை பொலிஸாரால் கைது!

0 361

                                                                                                                                (எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர

ஜமா அத்தே மில்லத்தே இப்ராஹீம் அமைப்பின் 16 உறுப்பினர்கள் இரு வாரத்துக்குள் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினராக செயற்பட்ட, ஜமா அத்தே மில்லத்தே இப்ராஹீம் அமைப்பின் மேலும் ஒருவரை பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர். அதன்படி அவருடன் சேர்த்து, தேசிய உளவுத்துறையின் தகவல்களை மையப்படுத்தி தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர்களாக செயற்பட்ட, ஜமா அத்தே மில்லத்தே இப்ராஹீம் அமைப்பின் 16 உறுப்பினர்கள் இரு வாரத்துக்குள் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

இந் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 16 பேரில் மூவர் பயங்கர்வாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கைதான தெளஹீத் ஜமாத் பிரதானிகளில் ஒருவரான நெளபர் மெளலவியின் மகனான 16 வயது சிறுவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஏனையோர் அம்பாறை பொலிஸ் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்ப்ட்டு வருவதாக கூறினார்.

அத்துடன் அவர்கள் ஏனையோர் அம்பாறை பொலிச் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டாலும் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாயவுப் பிரிவினர் அவர்கள் தொடர்பிலும், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவற்றை வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.

நேற்று அம்பாறையில் கைது செய்யப்பட்டவர், அபூ இக்ரிமா என புனைபெயரால் அழைக்கப்ப்ட்ட மொஹம்மட் ரபாய்தீன் மொஹம்மட் அலி என்பவராவார். வட்டதெனிய, வெலொம்பொட – கம்பளையைச் சேர்ந்தவர். இவர் பயங்கரவாதி ஸஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதன் பின்னணியில் நேற்று கைதான குறித்த நபரிடமும், ஏற்கனவே கைதானவர்களில் 11 பேருடனும் சேர்த்து 12 பேரிடமும் மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் மாரப்பனவின் கீழ் கல்முனை பொலிஸ் அத்தியட்சர் பிரியதர்ஷன ஹேரத் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் மூவரிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்கவின் ஆலோசனைக்கு அமைய விசேட மேலதிக விசாரணைகளும், அம்பாறை பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வரும் 12 பேர் தொடர்பில் சிறப்பு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!