இன்டர்போல் தேடிய ஈரானியர் இருவர் கட்டுநாயக்கவில் கைது!

0 670

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேசப் பொலிஸாரால் தேடப்பட்ட ஈரானியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 28 வயதான பெண்ணும் 18 வயதான ஆணும் ஆவார்.

இவர்கள் தங்களைப் பிரான்ஸ் பிரஜைகள் என ஆதாரபப்டுத்தும் வகையில் போலியான கடவுச் சீட்டுகளை  தம்வசம் வைத்திருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு தங்கைளப் பிரான்ஸ் பிரஜைகள் எனத் தெரிவித்து நாட்டுக்குள் உட்பிரவேசித்து இலங்கையில் சில காலம்  தங்கியிருப்பதற்கு இவர்கள்  திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவர்களை நாடுக கடத்துவதற்கான ஏற்பாடுகளை குடிவரவு குடியகல்வு திணைக்கள் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!