தென்கிழக்குப் பல்கலை மாணவன் திடீர் மரணம் தொடர்பில் விசாரணை!

0 469

                                                                                                                 (பாறூக் சிஹான்)
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவர் ஒருவர் இன்று (23)  அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார். பூண்டுலோயா – டன்சில் வத்தையைச் சேர்ந்த 24 வயதான ஜி . துர்கேஷ்வரன் என்பவேரே உயிரிழந்தவராவார்.
தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடம் – மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவர், சுகயீனமடைந்து இன்று அதிகாலை 5 . 30 மணியளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை . அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!