வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 26 : 1795-திரு­மலை பிரெடரிக் கோட்­டையை பிரித்­தா­னி­யர்கள் கைப்­பற்­றினர்

0 426

1768: இங்­கி­லாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது நாடுகாண் கடற்­ப­ய­ணத்தை இங்­கி­லாந்தில் இருந்து ஆரம்­பித்தார்.

1795: திரு­கோ­ண­ம­லையின் பிரெ­டரிக் கோட்­டையை ஒல்­லாந்­த­ரிடம் இருந்து ஸ்டுவேர்ட் தலை­மை­யி­லான பிரித்­தா­னியப் படை­யினர் கைப்­பற்­றினர்.

1795: திரு­மலை பிரெடரிக் கோட்­டையை பிரித்­தா­னி­யர்கள் கைப்­பற்­றினர்

1914: முதலாம் உலகப் போர்: ஜேர்­ம­னியின் குடி­யேற்ற நாடான டோகோ­லாந்து பிரெஞ்சு மற்றும் பிரித்­தா­னி­யர்­க­ளினால் முற்­று­கைக்­குள்­ளா­னது.

1914: முதலாம் உலகப் போரின்­போது, ரஷ்ய படை­களை டனென்பேர்க் சமரில் ஜேர்­ம­னியப் படைகள் தோற்­க­டித்­தன.

1920: அமெ­ரிக்­காவில் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்டு பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டது.

ஓகஸ்ட் 26 ஆம் திகதி பெண்கள் சமத்­துவ தின­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது.

1933: அமெ­ரிக்க விமா­னி­யான வில்லி போஸ்ட், முதல் தட­வை­யாக தனி­யாக விமா­னத்தில் உலகை சுற்­றி­வந்து சாதனை படைத்தார். இதற்கு 7 நாட்­களும் 18.3 மணித்­தி­யா­லங்­களும் தேவைப்­பட்­டன.

1942: யுக்­ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்­ம­னியர் அதி­கா­லையில் யூதர்­களை அவர்­களின் வீடு­களில் இருந்து வெளி­யேற்றி குழந்­தைகள், நோயா­ளிகள் உட்­பட 500 பேரை கொன்­றனர். 2000 பேர் மரண முகா­முக்கு அனுப்­பப்­பட்­டனர்.

1966: நமீ­பிய சுதந்­திரப் போர் ஆரம்­ப­மா­கி­யது.

1972: 22ஆவது ஒலிம்பிக் போட்­டிகள் ஜேர்­ம­னியின் மியூனிக் நகரில் ஆரம்­ப­மா­கின.

1978: பாப்­ப­ர­ச­ராக முத­லா­வது அரு­ளப்பர் சின்­னப்பர் பத­வி­யேற்றார்.

1978: முத­லா­வது ஜேர்­ம­னிய விண்­வெளி வீரர் சோயூஸ் விண்­க­லத்தில் விண்­ணுக்குப் பய­ண­மானார்.

1981: பாப்­ப­ரசர் 2 ஆம் அரு­ளப்பர் சின்­னப்­பரை துப்­பாக்­கியால் சுட்ட துருக்­கியின் மெஹ்மெத் அலி அகா­வுக்கு ரோம் நீதி­மன்றில் ஆயுட் கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

1997: அல்­ஜீ­ரி­யாவில் 60 இற்கு மேற்­பட்டோர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

2002: தென் ஆபி­ரிக்­காவில் இரண்­டா­வது பூகோள மாநாடு ஆரம்­ப­மா­கி­யது.

2011: போயிங் 787 ட்ரீம்­லைனர் விமா­னத்­துக்கு அமெ­ரிக்க விமான போக்­கு­வ­ரத்து முக­வ­ரகம், ஐரோப்­பிய விமானப் போக்­கு­வ­ரத்து பாது­காப்பு முக­வ­ரகம் ஆகி­யன அங்­கீ­காரம் வழங்கின.

2015: அமெ­ரிக்­காவின் வேர்­ஜீ­னியா மாநி­லத்தில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்ட செவ்­வி­யொன்றின் ­போது சி.பி.எஸ். நிறு­வ­னத்தின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் இருவர் முன்னாள் ஊழியர் ஒரு­வ­ரினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!