வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 27: 1939 -உலகின் முதலாவது ஜெட் விமானம் பறந்தது

0 423

1813 : ரஷ்யா, ஆஸ்திரியா,  மற்றும் புரூசிய படைகளை நெப்போலியனின் படைகள் “டிறெஸ்டென்” என்ற இடத்தில் தோற்கடித்தன.

1828: உருகுவே சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1828 : ரஷ்யப் படை “அக்கால்சிக்” என்ற இடத்தில் துருக்கியப் படைகளை வென்றது.

1828 : பிரேஸிலுக்கும் ஆர்ஜெண்டீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவே தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1859 : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பெற்றௌலியம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவே உலகில் வர்த்தக ரீதியில் வெற்றிகரமான முதல் எண்ணெய்க் கிணறு தோண்டப்படுதற்கு வழிவகுத்தது.

1881 : அமெரிக்காவின் புளோரிடாவில் வீசிய சூறாவளியினால் சுமார் 700 பேர் இறந்தனர்.

1883: இந்தோனேஷியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய சுனாமியினால் ஜாவா, சுமத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. சுமார் 36,000 பேர் கொல்லப்பட்டனர்.

1896 : ஆங்கிலோ- ஸான்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் போர் இடம்பெற்றது. உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 முதல் 09:40 வரை) நிகழ்ந்து முடிந்த போர் இதுவாகும்.

1916 : ஆஸ்திரியா, ஹங்கேரிக்கு எதிராக ருமேனியா போர் பிரகடனம் செய்தது.

1921 : 1916 இல் ஓட்டோமான் பேரரசுடன் போரிட்ட செரீப் உசைன் பின் அலி என்பவரின் மகனை ஈராக்கின் முதலாம் பைசல் என்ற பெயரில் ஈராக்கின் மன்னராக பிரித்தானியர் அறிவித்தனர்.

1928 : போருக்கு எதிராக கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில் 60 நாடுகள் கையெழுத்திட்டன.

1939 : உலகின் முதலாவது ஜெட் விமானமான Heinkel He 178 விமானம் முதல் தடவையாக பறந்தது.

1952 : லக்ஸம்பேர்க்கில் மேற்கு ஜேர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜெர்மனி 3 பில்லியன் டொச் மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.

1962 : நாசா மரைனர் 2 விண்கலத்தை வெள்ளி கிரகத்தை நோக்கி செலுத்தியது.

1975 : போர்த்துக்கலின் ஆட்சியிலிருந்த திமோரின் ஆளுநர்இ அதன் ஆட்சியை கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு, அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.

1991: எஸ்தோனியா, லத்வியா, லிதுவேனியா ஆகியவற்றின் சுதந்திரத்தை ஐரோப்பிய சமூகம் அங்கீகரித்தது.

1979 : அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த இந்தியாவின் கடைசி ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐஆர்ஏயின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1982 : துருக்கிய இராணுவ உயர் அதிகாரி அடில்லா அட்லிகாட் என்பவர் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.

1985 : நைஜீரியாவில் இராணுவப் புரட்சி மூலம் அந்நாட்டு அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

1991 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து மோல்டோவா பிரிந்தது.

2003 : செவ்வாய்க் கோள் பூமிக்கு 55,758,006 கிலோமீற்றர் தூரத்துக்கு வந்தது. 60இ000 ஆண்டுகளுகளில் பூமிக்கு இவ்வளவு நெருக்கமாக செவ்வாய் கிரகம் வந்தமை இதுவே முதல் தடவையாகும்.

2003: வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான 6 தரப்பு பேச்சுவார்த்தை முதல் தடவையாக நடைபெற்றது.

2006 : அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.

2009: பர்மாவில் அரச படையினருக்கும் கோகாங் பிராந்தியத்திலுள்ள சிறுபான்மை இனத்தவர்களுக்கும் இடையில் பாரிய வன்முறை மூண்டது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!