வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 28: 1990 -குவைத்தை தனது புதிய மாகாணமாக ஈராக் பிரகடனப்படுத்தியது

0 72

1349: கொள்ளை நோயைக் காரணம் காட்டி ஜேர்­ம­னியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1511: மலாக்­காவை போர்த்­துக்­கே­யர்கள் கைப்­பற்­றினர்.

1521: ஒட்­டோமான் துருக்­கி­யர்கள் பெல்­கிரேட் நகரைக் கைப்­பற்­றினர்.

1619: ஜேர்­ம­னியின் இரண்டாம் பேர்­டினண்ட் புனித ரோமப் பேர­ரசன் ஆனான்.

1789: வில்­லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்­தி­ரனைக் கண்­டு­பி­டித்தார்.

1844: பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இரு­வரும் பாரிஸில் சந்­தித்­தனர்.

1849: ஒரு மாத­கால முற்­று­கையின் பின்னர் வெனிஸ் நகரம் ஆஸ்­தி­ரி­யா­விடம் வீழ்ந்­தது.

1879: தென் ஆபி­ரிக்­காவில் கடைசி சுலு மன்னன் செட்ஸ்­வாயோ பிரித்­தா­னி­யர்­க­ளினால் சிறை ­பி­டிக்­கப்­பட்டான்.

1913: நெதர்­லாந்தின் அரசி வில்­ஹெல்­மினா த ஹேக் நகரில் அமைதி அரண்­ம­னையைத் திறந்தார்.

1916: முதலாம் உலகப் போர்: ருமே­னியா மீது ஜேர்­ம­னியும், ஜேர்­மனி மீது இத்­தா­லியும் போரை அறி­வித்­தன.

1922: ஜப்பான் சைபீ­ரி­யாவில் இருந்து தனது படை­களை விலக்கச் சம்­ம­தித்­தது.

1924: சோவியத் ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக ஜோர்­ஜி­யர்கள் கிளர்ச்­சியை ஆரம்­பித்­தனர்.

1931: பிரான்ஸும், சோவியத் ஒன்­றி­யமும் போர் தவிர்ப்பு ஒப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­தின.

1943: ஜேர்­ம­னிய நாஸி ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக டென்­மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்­ப­மா­னது.

1963: அமெ­ரிக்­காவில் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு சம­வு­ரிமை கோரி போரா­டிய மார்ட்டின் லூதர் கிங், 200,000 பேருடன் ‘என் கனவு யாதெனில்…’ என்ற புகழ்­பெற்ற வார்த்­தை­க­ளுடன் சொற்­பொ­ழி­வாற்­றினார்.

1988: ஜேர்­ம­னியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமா­னங்கள் மோதி பார்­வை­யா­ளர்கள் மீது வீழ்ந்­ததில் 75 பேர் கொல்­லப்­பட்டு 346 பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

1990: குவைத் தனது புதிய மாகாணம் என சதாம் ஹூஸைன் தலை­மை­யி­லான ஈராக்­கிய அரசு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.

1991: சோவி­யத்­திடம் இருந்து யுக்ரைன் விடு­தலை பெற்­றது.

1991: மிக்கைல் கொர்­பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்­சியின் பொதுச் செயலாளர் பத­வியில் இருந்து வில­கினார்.

1996: பிரித்­தா­னிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் சார்ள்ஸ், இளவரசி டயானா விவாகரத்து செய்தனர்.

2006: இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

2011: அமெரிக்காவில் சூறாவளியினால் 47 பேர் உயிரிழந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!