வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 29: 1825- பிரேஸிலின் சுதந்திரத்தை போர்த்துக்கல் அங்கீகரித்தது

0 393

708 : செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது.

1498 : போர்த்துக்கேய கடலோடியான வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப  முடிவு செய்தார்.

1521 : ஓட்டோமான் இராணுவம் சேர்பியாவின் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.

1825 :பிரேஸிலின் சுதந்திரத்தை போர்த்துக்கல் அங்கீகரித்தது

1541 : ஒட்டோமான் துருக்கியர் ஹங்கேரியின் தலைநகரைக் கைப்பற்றினர்.

1825 : பிரேஸிலின் சுதந்திரத்தை போர்த்துகல் அங்கீகரித்தது.

1831 : மின்காந்தத் தூண்டலை மைக்கேல் பரடே கண்டுபிடித்தார்.

1842 : நாஞ்சிங் உடன்படிக்கையின் படி முதலாம் அபின் போர் முடிவுக்கு வந்தது.

ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

1885 : கோட்லீப் டாயிம்லர் மோட்டார் சைக்கிளுக்கான காப்புரிமை பெற்றார்.

1898 : குட்இயர் டயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

1907 : கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1910 : கொரியாவில் ஜப்பானியரின் ஆட்சி ஆரம்பமாகியது.

1944 : அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.

1949 : சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கஸகஸ்தானில் நடத்தியது.

1966 : புகழ்பெற்ற பீட்டில்ஸ் இசைக் குழுவினர் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.

1991 : சோவியத் உயர்பீடம், அந்நாட்டு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.

1995 : முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.

1996 : நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.

1997: அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2003: ஈராக்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.

2004: மைக்கல் ஷ_மாக்கர் தொடர்ச்சியாக 5 ஆவது தடவை போர்மிய+லா வன் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.

2005: அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை கத்ரீனா சூறாவளி தாக்கியதில் 1,836 பேர் உயிரிழந்தனர்.

2012: லண்டன் பராலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப வைபவம் நடைபெற்றது.

2012: சீனாவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 26 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!