தலைவர்களின் முத்தப் பரிமாற்றங்கள்: வைரலாகிய ஜஸ்டின் மீதான மெலனியாவின் பார்வை

0 419

 

பிரான்ஸில் நடை­பெற்ற ஜி7 மாநாட்டில், கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோவை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெல­னியா ட்ரம்ப் முத்­த­மிட்டு வர­வேற்ற புகைப்­படம் இணை­யத்தில் வேக­மாக பர­வி­யுள்­ளது.

 பிரான்ஸின் பியரிட்ஸ் நகரில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜேர்­மனி, இத்­தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தலை­வர்கள் கலந்­து­கொண்­டனர்.

மேலும், இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, சிலி, புர்­கினோ பெஸோ, எகிப்து ஆகிய நாடு­களின் தலை­வர்கள் விருந்­தி­னர்­க­ளாக அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இம்­மா­நாட்டில் பங்­கு­பற்­றி­யவர்கள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கூட்­டாக புகைப்படம் பிடித்­துக்­கொண்­டனர். அப்­போது தலை­வர்கள் மற்றும் அவர்­களின் வாழ்க்கைத் துணை­வர்கள் ஒரு­வ­ரோ­டு ஒருவர் கைகொ­டுத்தும் முத்­த­மிட்டும் வர­வேற்­றுக்­கொண்­டனர்.

அப்­போது, கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோவை அமெ­ரிக்க முதற்­பெண்­மணி மெல­னியா ட்ரம்ப் முத்­த­மிட்­ட­போது அவரின் முக­பா­வனை பலரின் கவ­னத்தை ஈர்த்­தது.

ட்ரூடோவை மெல­னியா கிறக்­க­மாக பார்­வை­யி­டு­வ­தையும் ஜனா­தி­பதி ட்ரம்ப் கீழ்­நோக்­கிய பார்­வையும் பலரின் பேசு­பொ­ரு­ளா­கின. உண்­மையில் ஜனா­தி­பதி ட்ரம்புடன் கரம்­கோர்த்­த­வாறு பிர­தமர் ட்ரூடோ­வுடன் மெல­னியா முத்­த­மிட்டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

எனினும், ஜஸ்டின் ட்ரூடோவை மெல­னியா பார்க்கும் விதத்தில் உங்­களை பார்ப்­ப­தற்கு ஒரு­வரை தேடிக்­கொள்­ளுங்கள், கன­டா­வுக்கு தப்­பிச்­செல்­வ­தற்கு மெலனியா எண்ணுகிறார் போலும் என்றெல்லாம் டுவிட்டரில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

(படங்கள்: ரோய்ட்ர்ஸ், ஏ.எவ்.பி)

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!