வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 30: 1835 -மெல்பேர்ன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.

0 437

1791 : இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் அவுஸ்திரேலியாவில் மூழ்கியதில் 4 கைதிகள் உட்பட 35 பேர் பலியாகினர்.

1813 : அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர், அலபாமா மாநிலத்தில் ஆங்கிலேயக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.

1835 : அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.

1918 : ரஷ்ய போல்ஸ்விக் தலைவர் விளாடிமிர் லெனின், ஃபான்யா கப்லான் என்பவனால் சுடப்பட்டு, படுகாயம் அடைந்தார்.

1941 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் லெனின்கிராட் மீதான தாக்குதல் ஆரம்பமாயிற்று.

1945 : பிரித்தானியரிடமிருந்து ஹொங்கொங்கை ஜப்பான் கைப்பற்றியது.

1963: அமெரிக்க, சோவியத் யூனியன் தலைவர்களுக்கு இடையிலான நேரடி துரித தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1974: குரோஷியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 153 பேர் உயிரிழந்தனர்.

1984 : டிஸ்கவரி விண்வெளி ஓடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

1991 : சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிவதாக அஸர்பைஜான் அறிவித்தது.

1995: பொஸ்னிய சேர்பிய படையினருக்கு எதிராக நேட்டோ படையினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1999 : கிழக்குத் தீமோர் மக்கள் இந்தோனேஷியாலிருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2003: பாரென்ட்ஸ் கடலில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலொன்று மூழ்கியதால் 9 பேர் உயிரிழந்தனர்.

2013: பாகிஸ்தானிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 131 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!