சூடான களமாக மாறும் பிக்பொஸ் வீடும், போட்டியாளர்களை கிள்ளி விடும் கமலும்

0 1,134

–  ஏ.எம். சாஜித் அஹமட் –

பிக்பொஸ் வீட்­டினை விட்டு கஸ்­தூரி வெளியா­கி­விட்டார். அடுத்­த­வா­ரத்தின் நோமி­னேஷன் பட்­டி­யலில் கவின், சாண்டி, வனிதா, முகின் அகப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

கவின், லொஸ்­லியா ஒரே விட­யத்­தினை திரும்பத் திரும்ப செய்­வ­தாலும், பார்­வை­யா­ளர்­க­ளுக்கு அலுப்­புத்­தட்­டு­வ­தாலும் வேறு வகை­யான யுக்­தி­யினை செயற்­ப­டுத்­தினார் கமல்.

ஒவ்­வொ­ரு­வ­ரையும் தனித்­த­னி­யாக கென்­பிரன்ஸ் அறைக்குள் அழைத்து, பிக்பொஸ் என்­பது போட்­டிக்­கான இடம், நீங்கள் தர­மான போட்­டி­யாளர், விளை­யாட்­டுக்­களை விட்டு விட்டு போட்­டிக்குத் தயா­ரா­குங்கள் என்றார்.

லொஸ்­லி­யா­வினை அழைத்து போட்­டிக்கு வந்­த­தாக தெரி­ய­வில்லை சுற்­று­லா­விற்கு வந்­தி­ருப்­பது போல் உள்­ளது என்றார்.

இவ்­வு­ரை­யா­ட­லுக்குப் பின்னர் பிக்பொஸ் வீட்டில் இருப்­ப­வர்கள் நிதா­ன­மாக விளை­யாடத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர். இவ்­வா­ரத்தின் தலை­வ­ராக சேரன் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதால் சண்­டை­களின் தொடக்கம் சற்று குறை­வா­கவே உள்­ளது.

ஆனாலும் ஒவ்­வொ­ரு­வ­ராக பிக்பொஸ் வீட்­டி­லி­ருந்து வெற்­றி­ய­டைந்­துதான் செல்வேன் என்­பதை கூறும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­டதும், யாரும் யாரையும் விட்டுக் கொடுக்­காமல் போட்­டிக்கு தயா­ரா­கி­யி­ருப்­பது தெரி­ய­வ­ரு­கி­றது.

இவ்­வா­ரத்தின் பிக்பொஸ் வீட்டில் மிகச் சிறப்­பான விட­யங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. நாட்­டுப்­புற கூத்து கலை­ஞர்­களை வர­வ­ழைத்து கூத்தின் மகத்­துவம் பற்­றியும், மரபு வழி­யாக தமிழர் பண்­பாட்­டினில் அவை செலுத்­திய தாக்கம் பற்­றியும் விரி­வாக கூறப்­பட்­டது.

பின்னர் பிக்பொஸ் வீட்டில் இருப்­ப­வர்கள் தங்­க­ளுக்குள் ஒரு கதை­யினை தயார் செய்து கூத்து நிகழ்ச்­சி­களை செய்து காட்­டி­னார்கள். இரு குழுக்­க­ளாக பிரிந்து பொம்பை கதை தொடக்கம் நாட்டின் முக்­கிய பிரச்­சி­னை­களை ஆதா­ர­மாகக் கொண்டு நடித்துக் காட்­டப்­பட்ட கூத்து பார்ப்­ப­தற்கு சுவா­ரஷ்­ய­மா­க இ­ருந்­தது. இப்­படி நெடுங்­காலம் சந்­தோ­ஷ­மாக இருக்க முடி­யாத அள­விற்கு கமல் அடுத்த திட்­டத்­தினை மிக விரைவில் வகுப்பார்.

கஸ்­தூ­ரியின் வெளியேற்­றத்­துக்குப் பிறகு இர­க­சிய அறை பற்­றிய பேச்­சினை கமல் வெளியே எடுத்தார்.வேணாம் சாமி, என்னை விட்­டு­வி­டுங்கள் எனும் தோர­ணையில் கறா­ராக மறுத்து விட்டார் கஸ்­தூரி.

எப்­ப­டியும் இர­க­சிய அறைக்குள் ஒருவர் செல்ல வேண்டும். இப்­பொ­ழு­துள்ள சூழ் நிலையில் இர­க­சிய அறைக்குச் செல்­வ­தற்கு ரொம்­பவும் பொருத்­த­மா­னவர் சேரன்தான்.  பிக்பொஸ் வீட்டின் உள்ளே நல்ல போட்­டி­யா­ள­ராக சேர­னைத்தான் அனை­வரும் பார்க்­கின்­றனர். சேரனும் இந்த வீட்டின் மூத்த தலைவன் நான்தான் என்­பதைப் போல நடந்து கொள்­கிறார்.

இர­க­சிய அறை­யினை இவ்­வா­ரத்தில் செயற்­ப­டுத்த கமல் முனைந்தால் சேரனை தவிர்த்து, வேறு ஒரு­வரை அனுப்ப நேரி­டலாம். வனி­தா­வினை அனுப்­பினால் மக்கள் கொதிப்­ப­டைந்து விடு­வார்கள். ஏற்­கெ­னவே வீட்­டினை விட்டு வெளியே­றி­வரை மீண்டும் உள்ளே எடுத்­ததும் மக்­களின் வாக்­கிற்கு மாற்­ற­மான செயற்­பா­டுதான்.

ஆயினும் பிக்பொஸ் வீட்டின் விதி­மு­றை­களின் அடிப்­ப­டையில் வனி­தாவின் வருகை அமைந்­தது. இர­க­சிய அறையும் வனி­தா­விற்கு வழங்­கப்­படும் எனில் மக்கள் தீர்ப்பு பொய்ப்­பித்த­தாக மாறி­விடும்.இதற்­கி­டையில் பிரச்­சி­னைகள் ஏதா­வது இவ்­வாரம் தோற்றம் பெறு­மாயின், பிரச்­சி­னைக்கு கார­ண­மா­ன­வரை வெளியே எடுத்து இர­க­சிய அறைக்கு அனுப்ப முடியும்.

பிரச்­சி­னைக்­கான வாய்ப்­பு­களை பிக்பொஸ் டாஸ்க்­குகள் ஏற்­ப­டுத்தும் வகை­யாக போட்­டிகள் தொடங்­கப்­படும். அப்­போட்­டி­களில் உரு­வாகும் பிரச்­சி­னை­களை மைய­மாக வைத்து ரக­சிய அறை யாருக்கு என்­பதை துல்­லி­ய­மாக தீர்­மா­னிப்பார் கமல்.

பிக்பொஸ் வீட்டில் உள்­ள­வர்­க­ளுக்கு தொலை­பே­சிகள் வழங்­கப்­பட்டு, கதை சொல்­லக்­கூ­டிய புகைப்­ப­டங்­களை எடுத்துக் காட்­டுங்கள் என்று கட்­டளை பிறப்­பிக்­கப்­படும். ஒவ்­வொ­ருத்­தரும் குழு­வாக பிரிந்து புகைப்­ப­டங்­களை எடுக்கத் தொடங்­கு­வார்கள்.

இறு­தி­யாக எடுத்துக் கொண்ட புகைப்­ப­டங்­க­ளினை கோர்­வை­யாக கோர்த்து தொட­ராக கதை சொல்ல வேண்டும். சேரன் இயக்­குனர் என்­பதால் வித்­தி­யா­ச­மான புகைப்­ப­டங்­களை எடுத்­தி­ருந்தார்.  பிக்பொஸ் வீட்டில் வாழ்ந்த வாழ்­வி­னையும், இங்கு கழித்த பொழு­து­க­ளையும், சந்­தித்த மனி­தர்­க­ளையும் தொட­ராக வடித்­தி­ருப்பார். இதனால் புகைப்­படம் சொல்லும் கதையில் சேரன் அணிதான் வெற்றி பெற்­றது.

பிக்பொஸ் வீட்டின் உள்ளே இப்­பொ­ழுது குறைந்த எண்­ணிக்­கை­யான வீட்­டா­ளர்­கள்தான் இருக்­கி­றார்கள். கவின், சாண்டி, தர்ஷன், சேரன், முகின், வனிதா, லொஸ்­லியா, ஷெரீன் இவர்­களில் நல்ல போட்­டி­யா­ள­ராக யார் முண்­டி­ய­டித்துக் கொண்டு பிக்பொஸ் வீட்டின் சவால்­களை எதிர்­கொள்­வார்கள் என்­பதை கணிப்­பதில் கமல் மும்­மு­ர­மா­க­வி­ருக்­கிறார்.

சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்­ற­படி மக்­களின் மன­நி­லை­யினை மாற்­றக்­கூ­டிய போக்கு பிக்பொஸ் வீட்டில் இருப்­ப­வர்­க­ளுக்கு வாய்த்து விடு­கி­றது. சென்ற வாரம் மக்­களின் அபி­மா­னத்­தினை பெற்­ற­வர்கள், இந்த வாரம் மக்­களின் வெறுப்­புக்கு ஆளா­கி­றார்கள். இதனை சாத­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு கமல் செய்யும் லீலைகள் விசித்­தி­ர­மா­னவை.

இனி பிக்பொஸ் வீடா­னது அதிகம் சூடு பிடிக்கும். ஒவ்­வொ­ரு­வரும் வெற்­றியை நோக்கி நகர்­கின்ற போது போட்டித் தன்­மைகள் அதி­க­ரிக்கும், போட்­டி­யினால் விட்டுக் கொடுப்­புகள் உண்­டா­கு­வ­தற்கு பிக்பொஸ் வீட்டில் எந்த வாய்ப்­புக்­களும் இல்லை.

யார் யாருடன் முரண்­பட்டுக் கொள்­வார்கள் என்­ப­தினை குறி­யாக வைத்துக் கொண்டு இர­க­சிய அறை­யினை பயன்­ப­டுத்தி இன்னும் பல சிக்­கல்­களை பிக்பொஸ் வீட்டில் முளைக்க வைப்பார் கமல். நாட்கள் நெருங்கிக் கொண்­டி­ருக்கும் வேளையில் பதற்­றத்­துடன் போட்­டி­களில் கவனம் செலுத்த வீட்டில் உள்­ள­வர்கள் பாரிய முயற்­சி­களை மேற்­கொள்­வார்கள்.

பிக்பொஸ் வீட்டில் எடுக்­கப்­படும் முயற்­சிகள் யாவும் முரண்­பாட்டில் மாத்­தி­ரமே முடியும் என்­பதை மக்கள் நன்­க­றிவர். அது­வ­ரைக்கும் அகம் வழியே அகப்பட்டுக்கிடப்போம்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!