லிப்டில் 25 நிமிடங்கள் சிக்கிய பாப்பரசர் : தீயணைப்புப் படையிரால் விடுவிப்பு

Pope says got stuck in Vatican lift, freed by fireman

0 1,225

வத்­திக்­கானில் இன்று ஆரா­த­னைக்கு தாம­த­மாக வந்த பாப்­ப­ரசர் முதலாம் பிரான்சிஸ், மின்­னு­யர்த்­தியில் (லிப்ட்) தான் சிக்கிக் கொண்­ட­தா­கவும் பின்னர் தீய­ணைப்பு வீரர்­களால் தான் விடு­விக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

நேற்று வாராந்த ஞாயிறு ஆரா­தனைக்கு வழக்­கத்­துக்கு மாறாக 7 நிமி­டங்கள் தாம­தமாக பாப்­ப­ரசர் வந்தார்.

இந்­நி­கழ்வை நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பு­வ­தற்குத் தயா­ரான இத்­தா­லிய தொலைக்­காட்­சிகள், ஆரோக்­கிய கார­ணங்­களால் இத்­தா­மதம் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூடும் எனக் கவ­லை­ய­டைந்­தன.

ஆனால், இத்­தா­ம­தத்­துக்­கான கார­ணத்தை பாப்­ப­ரசர் பின்னர் அறி­வித்தார்.  82 வய­தான பாப்­ப­ரசர் முதலாம் பிரான்சிஸ் இது குறித்து கூறு­கையில், “தாம­த­மாக வந்­த­மைக்­காக நான் மன்­னிப்பு கோர வேண்டும். மின்­சாரக் கோளாறு கார­ண­மாக மின்­னு­யர்த்­தியில் நான் 25 நிமி­டங்கள் சிக்கிக் கொண்டேன், பின்னர் தீய­ணைப்புப் படை­யினர் வந்­தனர்” என்றார்.

தீய­ணைப்புப் படை­யி­ன­ருக்­காக கர­கோஷம் செய்­யு­மாறு பாப்­ப­ரசர் கோரி­ய­போது, பலரும் கர­கோஷம் செய்து பாராட்டுத் தெரி­வித்­தனர். பாப்­ப­ரசர் ஒருவர் லிப்டில் சிக்­கிக்­கொண்டு தீய­ணைப்புப் படை­யி­னரால் விடு­விக்­கப்­பட்­டமை இதுவே முதல் தடவை எனக் கரு­தப்­ப­டு­கி­றது. 2015 ஆம் ஆண்டு ரோமில் கன்­னி­யாஸ்­தி­ரிகள் இருவர் லிப்ட் ஒன்றில் உணவு நீர் எதுவும் இல்லாத நிலையில், லிப்டில் 3 தினங்கள் நிர்க்கதியாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!