வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 02 : 1951-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஸ்தாபித்தார்.

0 90

1945: சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டது

1951 : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஸ்தாபித்தார்.

கி.மு. 47 : எகிப்திய அரசி ஏழாம் கிளியோபெட்ரா தனது மகன் சிசேரியனை அரசனாக்கினாள்.

1945: சரணடைவதற்கான ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டது

கி.மு. 31 : கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தனி, மற்றும் கிளியோபெட்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.

1666 : லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.

1752 : கிரகரியின் நாட்காட்டி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1792 : பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றுக்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.

1806 : சுவிட்ஸர்லாந்தில் ஏற்பட்ட நிலசரிவில் 457 பேர் உயிரிழந்தனர்.

1870 : பிரான்ஸில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரஷ்யப் படையினர் பிரான்ஸின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவரின் படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.

1885 : அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள்இ வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரைவிட்டு ஓட நிர்பந்திக்கப்பட்டனர்.

1898 : பிரித்தானிய மற்றும் எகிப்தியப் படைகள் சு+டானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை ஏற்படுத்தினர்.

1935 : அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப்பட்டனர்.

1945 : இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் சரணடைந்தது. இதற்கான ஆவணத்தில் டோக்கியோ வளைகுடாவில் “மிசூரி” எனும் அமெரிக்கக் கப்பலில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஷிகேமிட்ஸஷு கையெழுத்திட்டார்.

1945 : பிரான்ஸின் ஆட்சியலிருந்து சுதந்திரம் பெறுவதாக வியட்நாம் அறிவித்தது. வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் (வடக்கு வியட்நாம்) ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.

1946 : பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில் ஜவஹர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.

1951 : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஸ்தாபித்தார்.

1958 : அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1969 : ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தன்னியக்கப் பணம் வழங்கி இயந்திரம் நியூயோர்க்கில் அமைக்கப்பட்டது.

1970 : சந்திரனுக்கான அப்பல்லோ 15, அப்பலோ 19 பயணத்திட்டங்களை விண்வெளிப் பயணத் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.

1951 : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஸ்தாபித்தார்.

1990 : மோல்டோவாவின் ஒரு பகுதியான திரான்ஸ்னிஸ்திரியா பிராந்தியம்இ தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

1992 : நிக்கராகுவாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.

1996 : பிலிப்பைன்ஸ் அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1998 : சுவிட்ஸர்லாந்து விமானமொன்று கனடாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 229 பேரும் உயிரிழந்தனர்.

1998: ருவாண்டாவின் நகர மேயர்களில் ஒருபவரான ஜீன் போல் அகாயேசு, இன அழிப்பு தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டார்.

2009: இந்தியாவின்ஆந்திர பிரசேத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்இ ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர். வை.எஸ்.ராஜசேகர ரெட்டி உட்பட ஹெலியிலிருந்த ஐவரும் உயிரிழந்தனர்.

2018: பிரேஸிலின் தேசிய நூதனசாலை பாரிய தீயினால் அழிந்தது. 90 சதவீதமான சேகரிப்புகள் இழக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!