வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 03: 1971-கத்தார் சுதந்திரம் பெற்றது

0 56

301: உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும்,  உலகில் தற்போதுள்ள மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ,  புனித மரீனஸினால் இத்தாலிக்கு மத்தியில் ஸ்தாபிக்கப்பட்டது.

1189: முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்.

1971 : கத்தார் சுதந்திரம் பெற்றது

1260: பலஸ்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் அரேபிய மாம்லுக் படையினர் வெற்றி பெற்றனர்.

இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த தீர்க்கமான முதலாவது தோல்வியாகும்.

1777: அமெரிக்க தேசிய கொடி முதல் தடவையாக அமெரிக்காவில் பறந்தது.

1783 : அமெரிக்கப் புரட்சிப் போர் முடிவுக்கு வந்தது.

பாரிஸில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பிரித்தானியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றது.

1798: பெலீசின் கரையில் ஸ்பானியர்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஒருவாரப் போர் இடம்பெற்றது.

1801: இலங்கையில் நெல் மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

1855: நெப்ராஸ்காவில் அமெரிக்கப் படையினர் சியூ பழங்குடியினரைத் தாக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பேரைக் கொன்றனர்.

1861: அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் கென்டக்கி மீது தாக்குதலைத் தொடுத்தனர்.

1878: பிரிட்டனின் தேம்ஸ் நதியில் “பிரின்சஸ் அலைஸ்” பயணிகள் கப்பல் பைவெல் அரண்மனையுடன் மோதியதில் 640 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

1895: ஜோன் பிரைய்லர் என்பவர் அமெரிக்க காலபந்தாட்டப்போட்டியொன்றில் லெட்ரோப் அத்லெட்டிக் சங்கத்துக்காக விளையாடுவதற்காக 10 டொலர் ஊதியம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் அமெரிகக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது தொழிற்சார் வீரரானார் அவர்.

1914: அல்பேனிய இளவரசன் வில்லியம் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆறுமாத ஆட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறினான்.

1925: அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது ஆகாயக் கப்பல் ஒஹையோ மாநிலத்தில் விபத்துக்குள்ளானதால் 42 பேர் உயிரிழந்தனர்.

1933: சோவியத் ஒன்றியத்தின் அதி உயர் சிகரமான “பொதுவுடமை முனையை” (7495 மீற்றர்) யெவ்கேனி அப்லாக்கொவ் அடைந்தார்.

1939: இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான ஜெர்மனியின் முற்றுகையை அடுத்து பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா,  ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன ஜெர்மனி மீது போர் தொடுத்தன.

1943: இரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன.

1971: பிரிட்டனிடமிருந்து கத்தார் சுதந்திரம் பெற்றது.

1976: நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.

2004: ரஷ்யாவில் பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் முடிவுக்கு வந்தன. மாணவர்கள், இப்பாடசாலையில் ஆயுதபாணிகளால் ஆசிரியர்கள் உட்பட 344 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

2014: இந்தியா,  பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்தனர்.

2017: வடகொரியா தனது 6 ஆவது அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதனால்  6.3 ரிச்டர் அளவிலான அணுகுண்டு சோதனையொன்றை நடத்தியது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!